அப்பா மகள் உறவு... எப்போதும் ஒருபடி மேல்... நிமிஷா சஜயன் வேற இருக்காங்க.. சித்தா லேட்டஸ்ட் வீடியோ வைரல்..
அப்பா மகள் உறவு பற்றி சில படங்கள் பாஸ்ட்ல வந்திருக்கு. ஒரு சில படங்கள் எல்லாம் ரொம்ப சூப்பர் ஹிட் ஆகியிருக்கு. அஜித் நடிச்ச விசுவாசம் படம் தமிழ்நாட்டில் பெரிய ஹிட், அதற்கு காரணம் கடைசியில் வந்த அப்பா மகள் செண்டிமெண்ட் தான். அதுபோல நிறைய படங்கள் இருக்கின்றன. ஹீரோக்கள் அந்த சப்ஜெக்ட் தொடும்போது எல்லாம் ஹிட்டு தான்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை.. இந்த பாட்டில் வரும் வரிகளை உணரும் பொது நம் கண்ணில் நம்மையே அறியாமல் கண்ணீர் வழியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி மீண்டும் ஒரு அப்பா மகள் உறவின் அடிப்படையில் ஒரு படம். சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பெயர் சித்தா. இந்த படத்தின் நாயகன் சித்தார்த் மற்றும் அவரது மகளாக ஒரு சின்ன பொண்ணு நடிச்சிருக்காங்க. இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம்.
நாளைய இயக்குனர் மூலமாக இன்று தனது வாழ்க்கையில் நாளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எங்கள் அண்ணன் S.U..அருண் குமார் அவர்களின் படைப்பான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று அவங்க ஊர் மக்கள் கருத்து. மதுரை காரர் தான் இவரு. ஹீரோயின்னா நிமிஷா சஜயன் நடிச்சிருப்பது படத்துக்கு கூடுதல் பலம்.
Video: