கொஞ்சம் ட்ரீம் பண்ணிருக்கலாம் ஆனாலும் சீயான் விக்ரமின் ருத்ர தாண்டவம். கோப்ரா படம் எப்படி இருக்கு? முழு விவரம்.

Chiyaan vikram cobra review

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீயான் விக்ரம் நடித்த கோப்ரா படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஏற்கனவே இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்ததால் இயக்குனர் அஜய்யின் writing மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது..

எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில சிக்ஸர் அடித்து உக்காருவது தான் கெத்து. இந்த படத்தின் மூலம் அஜய் ஒரு boundary அடித்துள்ளார். அதற்கு காரணம் படத்தின் டைமிங். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் படம். அதனால் கொஞ்சம் அங்கும் இங்கும் lag ஆகியிருக்கிறது தவிர, படம் செம்ம பிரமாண்டம். ஒரு சங்கர் படம் பார்த்த பீல்.

Chiyaan vikram cobra review

சீயான் விக்ரம் இந்த படத்துக்கு மிகவும் மெனக்கெட்டு நடித்துள்ளார். அவர் ஊர் ஊரக சென்று படத்தை ப்ரொமோட் செய்ததில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. படம் முழுக்க கணக்கை வைத்தே கதை நகர்கிறது, அவர் எப்படி இது crimes செய்கிறார் என்பதில் detailing பிரிச்சு மேஞ்சுட்டார் இயக்குனர். ஒவ்வொரு கெட்டப்க்கும் சீயானின் பாடி language மிரட்டுகிறது.

Chiyaan vikram cobra review

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் காட்சிகள் சொதப்பவில்லை, பயங்கர engaging. படத்தை அப்டியே தூக்கி நிறுத்துவது இன்டெர்வல் பிளாக் தான். அப்படி ஒரு ட்விஸ்டு.

படத்தை அப்போஅப்போ ஸ்லொவ் செய்ததே ஹீரோயின்களுடன் வரும் லவ் காட்சிகள் தான். மூன்று கதாநாயகிகளில் மீனாட்சியின் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. மற்ற இருவரின் காட்சிகள் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம். படத்தில் ஒரு 20 நிமிடங்கள் கம்மி செய்திருந்தால், படத்தில் லெவல் வேற மாதிரி இருந்திருக்கும்.

Chiyaan vikram cobra review

கண்டிப்பா mention பண்ண வேண்டியது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை. மனுஷன் தெறிக்க விட்டிருக்கிறார். கண்டிப்பா அஜய்க்கு இந்த படம் ஹிட் தான். சீயான் விக்ரமுக்கும். ஸ்ரீநிதி ஷெட்டிக்கு ஒரு நல்ல debut தமிழ் பிலிம்.

பாட்டோட visuals கொஞ்சம் ஓகே, படமா பார்த்தா வேறமாதிரி. choreo கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கண்டிப்பா புக் பண்ணுங்க.

ரேட்டிங்: 3/5

Related Posts

View all