ஒரே சொருகு.. மணிரத்னம் என்ட்ரி.. பொன்னியின் செல்வன் சோழா சோழா மேக்கிங் வீடியோ வைரல்.
பொன்னியின் செல்வன் கதை தமிழர்களின் வீர வரலாறு. இந்த படத்தை கண்முன் கொண்டுவருகிறார்கள் என்றால் அதற்கு எவ்வளவு உழைப்பு தேவை. கொஞ்சம் பிசிறு தட்டினாலும் பிரச்னை ஆகிவிடும்.
இந்த சோழா சோழா பாட்டின் மேக்கிங் கிலிம்ப்ஸ் பார்த்ததிலிருந்து, யாரை பிரமிபோடு பாக்கணும்னு புரியல… தெறிக்கும் இசை தந்த ARரஹ்மானாயா, பராக்கிரமா நடிப்பு அரக்கன் விக்ரமயா, மெய் சிலிர்க்க வைக்கும் டைரக்டர் மணி sir யா..
சோழர்களின் கதாபாத்திரத்தைய் விக்ரமை தவிர வேற யாரும் பொருந்த மாட்டார்கள் என்பது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. ஆதித்த கரிகாலனாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
இந்த மேக்கிங் வீடியோவில் 0:09 நொடிகள் வரும்பொழுது pause செய்து பார்க்கவும், மணிரத்னம் என்ட்ரி நீண்ட நாள் கனவு கண் முன்னே நிறைவேறிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிகிறது.
படக்குழுவினரின் கடின உழைப்புக்கு படம் நிச்சயம் பிரமாண்ட வெற்றி பெறும்.
வைரமுத்து இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். வரிகளில் வலியையும் வீரத்தையும் வைரமுத்து போல கடத்த வேறு எவராலும் முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
வந்தியத்தேவனின் பொன்னிநதி, ஆதித்த கரிகாலனின் சோழா சோழா. அடுத்ததாக அருள்மொழிவர்மனின் பாட்டுக்காக ஆவல்.
Video: