திக்கட்டும் சோழர் புகழ்.. பிரேக் அப் சாங்கா மாத்திட்டீங்களே இதை. சோழா சோழா வீடியோ வைரல்.
இந்த பாடலை திரையரங்குகளில் காணும் போது அரங்கமே ஆறியது என்பதை மறக்க முடியுமா, அப்படியொரு பாட்டு தான் இந்த சோழா சோழா பாட்டு. “கற்பித்தோம் உயிர் சோழம் என.. ஒப்பித்தோம் அதை வேதம் என..” இந்த வரிகளை மீண்டும் மீண்டும் கேட்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. கண்டிப்பாக அந்த உணர்ச்சியை ஏற்றி பாடல் கேட்பவர்களுக்கு இப்படி தான் இருக்கும் என்று நம்புகிறோம்.
அனைத்து பாடல்களையும் வெளியிடுங்கள், திரையில் மீண்டும் மீண்டும் காணமுடியவிலையே என்ற ‘வருத்தம்’ இன்னும் நீங்கவில்லை… திரையில் வராத “சொல்” பாடலையும் வெளியிடுங்கள்;கண்கள் கண்டு களிப்புரட்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சொல் பாடல் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தது, கடந்த வாரங்களில்.
என்றும் புதுமையான பாடல்களை நமக்கு தந்துக்கொண்டே இருக்கும்.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய மற்றுமொரு “இசைப்புயல்” என்று தான் இப்பாடலை சொல்ல வேண்டும். இந்த பாடல் அனைவர்க்கும் ஒரு ஸ்லொவ் பாய்சன். கேட்டாக ஆரம்பித்துவிட்டாள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தான் தோன்றுகிறது. அப்படியொரு பாடல் கொடுத்திருக்கிறார் ரகுமான், அந்த பாடல் மட்டுமல்ல பொன்னியின் செல்வன் ஆல்பம்மே அப்படி தான்.
இந்த கதாபாத்திரத்திற்கு விக்ரமை தவிர வேறு யாருக்கும் நன்றாக இருந்திருக்காது. சீயான் விக்ரமின் அப்படியொரு பயங்கரமான performance இந்த பாடலில் வெளிப்பட்டிருக்கும். ஆதித்த கரிகாலனா வாழ்ந்திருக்கிறாரு மனுஷன்.
Video: