அக்னி சிறகே இது நீங்க தானா.. ஜீவா மேல ஹீரோயின்.. சுந்தர் சி படம்னாலே ஜாலி தான். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நம்ம எப்போவுமே சொல்வது ஒன்னு தான் யார் என்ன வேணா படம் எடுக்கட்டும், பசங்களுக்கு வருஷ வருஷம் சுந்தர் சி படம் மட்டும் தவறாம வந்தரனும். இவரோட படம் தான் ஜாலியா wholesome பீல் கொடுக்கும். படத்தில் எல்லா விதமான எமோஷன்ஸ் சரியா காட்டுவார். லவ்வு, சோகம், காமெடி, action, ட்ராமான்னு எல்லாமே இருக்கும். எல்லாத்தையும் கலந்து ஒரு கலவை கொடுப்பாரு பாருங்க, வேற லெவல் இயக்குனர் அவரு.
தற்போது இந்த வருடத்திற்கான கோட்டா முடிஞ்சது. இன்னும் கொஞ்ச நாளில் காபி வித் காதல் படம் ரிலீஸ் ஆக போகுது. கதாநாயகிகள் மட்டும் அம்மாடியோவ் இத்தனை பேரா என்ற அளவுக்கு ஒரு பட்டாளமே இருக்கு. அம்ரிதா, மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, DD, ரைசான்னு அதனை பேரு. போதும் போதும் என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டே இருக்கே அப்படிங்கிற பீல் தானே உங்களுக்கு.
மேலும் ஜீவா, ஜெய் சேர்ந்து நடிக்கும் இரண்டாவது சுந்தர் சி படம். எப்படி கதாநாயகிகளுக்கு ஒரு கெமிஸ்ட்ரி இருக்கோ அந்த மாதிரி இவர்களுக்கும் நட்பு, சண்டை எல்லாமே செட் அவுத்து. இவங்ககூட ஸ்ரீகாந்த் வேற நடிக்கிறார். ஜீவாவோட அண்ணனா நடிக்கும் இவருக்கும் நிறைய டாக்கி portion இருக்கு. இவர்தான் வில்லனா கூட இருக்கலாம் படத்தில். வில்லனா ஜாலியான வில்லன்.
சுந்தர் சி இயக்குநரா இந்த படகில் அசால்ட்டா ஜெய்ச்சிடுவாரு. அவ்வளவு கலர்புல்லா இருக்கு படம். அதுமட்டுமில்லாம காமெடிக்கு யோகி பாபு, ரெடின் ரெண்டு பெரும் இருக்காங்க. யுவன் பின்னணி இசை செம்மயா இருக்கு. ஊட்டியை ரொம்ப அழகா காட்டிருக்காங்க. விசுவல்ஸ்க்கு பெரிய விசில்.
லேட்டஸ்ட் வீடியோ: