சுந்தர் சி படம் எதுக்கு வேணும்னா இதுக்கு தான்.. காபி வித் காதல் ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமா தற்போது இருக்கும் நிலையில் ஜாலியா ஒரு படம் வருமா என்று ஏங்கி கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சுந்தர் சி இயக்கிய காபி வித் காதல் படம் ஒரு fun rideஆக இருக்கப்போகுது கலகலப்பு படம் மாதிரி. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் action படங்களை சமீப காலமாய் பார்த்து அவர்களுக்கு போர் அடித்துவிட்டது.
நம்ம எந்த நேரமும் அதே மூடில் இருக்கமுடியது அல்லவா? அதனால் இப்படியொரு படம் தமிழ் சினிமாவிற்கு கண்டிப்பாக தேவை. மக்களாகிய ரசிகர்கள் அவர்களின் வாழ்க்கையில் அவங்க நிறைய go-through பண்ணிட்டு இருக்காங்க. அவங்கள திரையரங்கிற்கு வரவைத்து சும்மா அவங்களுக்கு மண்டை கொடச்சல் கொடுக்கிற மாதிரி படம் இருந்தால் நல்லா இருக்காது. அவங்களோட கவலையை மறந்து அவங்க படம் பார்க்கணும். அதுக்காகவே வருது இந்த படம்.
ஜீவா, ஜெய், அம்ரிதா, மாளவிகா, DD, யோகி பாபு, ரெடின், சம்யுக்தா, ஸ்ரீகாந்த், மறைந்த பிரதாப் போத்தன் என்று ஒரு பட்டாளமே நடிச்சியிருக்கு இந்த படத்துல. படம் முழுக்க ஊட்டியில் நடக்கும் ஒரு கதை. அதேனுக்கேற்றவாரு விசுவல்ஸ் எல்லாம் பிரெஷா இருக்கும் போல. படம் பார்க்கும் நம்மையே மீண்டும் ஊட்டிக்கு போக தூண்டும் விதமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
நடிகரை தாண்டி இயக்குனராக சுந்தர் சி இயக்கிய முறைமாமன் படத்தில் இருந்து அவர் இயக்கும் எல்லாப் படத்துக்கும் இனிமேல் இயக்க போகும் படம் வரை உங்கள் ரசிகர் தான் நாங்கள் அனைவரும். ஊட்டி, பொள்ளாச்சி, கும்பகோணம், காரைக்குடி சுந்தர் சி பெரும்பாலும் அவர் திரைப்படங்களை இங்கே தான் எடுக்கிறார்.
சுந்தர் சி அப்டினாலே ஒரு ப்ராண்ட். அவர் படம் ரொம்ப ஜாலியா இருக்கும் பா. லவ்வு, செண்டிமெண்ட், கிளாமர், action, காமெடி என்று எல்லா விஷயங்களிலும் புகுந்து விளையாடுவார் என்பது அனைவர்க்கும் தெரியும், அதனால் இவர் படம் ரிலீஸ் ஆனால் மினிமம் கேரண்ட்டி என்று திரையரங்கு உரிமையாளர்களே கூறுவர்.
இந்த படம் கொஞ்சம் போர் அடிக்காமல் சென்றுவிட்டாள் ரசிகர்கள் ஹிட் ஆகி விட்ருவாங்க. ஏற்கனவே யுவன் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ஹிட்டு. படம் அக்டோபர் மாசம் ரிலீஸ் ஆக போகிறது என்பது கூடுதல் தகவல்.
Video: