என்னடா கடைசி சீனில் கதிகலங்க வெச்சுட்டாங்க நம்மள. நயன்தாரா செம்ம. லேட்டஸ்ட் திகில் வீடியோ வைரல்.
மாயா - ஒரு பேய். அதுக்குள்ளே ஒரு தாய். அது தேடும் தன் சேய். படம் நல்லாயிருக்கு என்ஜாய் என்று தான் நாங்கள் முதலில் இந்த படத்துக்கு விமர்சனம் தந்தோம். அந்த படத்தின் இயக்குனர் தான் இந்த படத்திற்கும் இயக்குனர். நயன்தாரா அறிமுகம் செஞ்சு வெச்ச இயக்குனர். அவர் பெயர் அஸ்வின். ரொம்ப திகிலா படம் எடுக்கத்தான் பிடிக்கும் போல. போன படம் கேம் ஓவர் டாப்சீ வெச்சு பண்ணாரு. மீண்டும் ஒரு பேய் படம் நயன்தாராவை வைத்தே. நேற்று நயன் பிறந்தநாள், அதை முன்னிட்டு டீசர் வெளியாகியிருக்கு.
படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. ட்ரெய்லர் கட்ஸ் மிகவும் அருமையாக இருந்தது சவுண்ட் டிசைனிங் இன் லெட்டர்ஸ் வெரி டிஃபரண்ட். ரொம்ப புடிச்சிருந்தது. ஹாலிவுட் ஹாரர் படம்னா ஜேம்ஸ் வான். தமிழ் ஹாரர் படம்னா அஸ்வின் சரவணன். அந்த அளவுக்கு இருக்கு இந்த ட்ரைலர். ஹாரர் படத்தில் முக்கியமான அம்சமே இசை தான், அதை கொஞ்சமாக யூஸ் பண்ணி திகில் காட்சிகள் மூலம் இந்த ட்ரைலரில் நம்மை மிரள வெச்சிருக்காரு. தமிழில் முழு நீள பேய் படம் வந்தும் ரொம்ப நாள் ஆச்சு, கண்டிப்பா இந்த படம் சம்பவம் பண்ணும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் சமீபத்தில் வந்த பேய் படங்களின் தாக்கத்தால் பேய் படங்கள் பார்க்கும் ஆர்வமே குறைந்து விட்டது சிலருக்கு. பேய் படம் என்றாலே ஒரு பயம், திகில், ரத்தம், சத்தம், ஓலம் எல்லாம் இருக்க வேண்டும் என்றில்லாமல், அமைதியாய் நிழலை(silhouette) மட்டுமே வைத்து ஒரு சில படங்களில் விளையாடியிருப்பர், அதனால் தான் கொஞ்ச நாட்களாக தமிழில் தரமான பேய் படம் வரவில்லை என்ற குறை இந்த படம் மூலமாக நீங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நயன்தாராக்கு எப்போதுமே challenging ரோல் பண்ணுவது ரொம்ப பிடிக்கும். அதுபோல இந்த படத்திலும் பார்வையற்றவராக நடித்திருக்கிறார் என்று தான் நினைக்கிறோம். அனுபம் கேர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த படம் மினிமம் கேரண்ட்டி என்று சொல்லலாம். அவரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கக்கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
Video: