நயன்தாரா செம்ம அழகு.. என்னடா இவ்வளவு திகில கிளப்புறீங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பேய் படம் பண்ணுகிறார்கள் என்றால் அதுக்கு ஒரு connection வேண்டும் முன்னர் நடந்த சம்பவத்தோடு. அப்படி எதாவது இருந்தால் தான் கிளைமாக்ஸ் காட்சியில் அதை வைத்து அவங்க justify பண்ண சரியாக இருக்கும். இயக்குனர் அஸ்வின் சரவணன் அதில் ஸ்பெசலிஸ்ட் என்று சொல்லலாம். சரியான மீட்டரில் பேய் படங்களை எடுக்கும் வல்லமை படைத்தவர். இவர் படம் ரொம்ப சின்ன படங்களா இருக்கு, ஆனால் அந்த ஒன்றரை மணி நேரத்தில் திகிலை கிளப்பி விட்டுடுவாரு.
இந்த படம் ஒரு பீரியட் படம். பீரியட் படம் என்றால் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. இந்தியாவே லாக்டௌன்ல இருந்துச்சே ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனாவால். அப்போ நாடாகும் சம்பவம் தான் படத்தின் கதை. லக்டௌன் முன்னாடி ஒரு குடும்பம் ஜாலியா இருக்கு, அதற்கு பின்னர் வீட்டுக்கு வந்ததும் லாக்டௌன் போடுறாங்க, யாரும் வெளிய போக முடியாது. ஆனால் அந்த குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது. ச்ச சூப்பர் கான்செப்ட்.
என்ன பிரச்னை என்றாலும் வீட்டுக்குள் வைத்துதான் வைத்தியம் பார்க்கவேண்டும். பேய் ஓட்டுபவர்கள் எல்லாமே ஆன்லைன்-ல் தான் எல்லாமே பண்றாங்க. இது நாடாகும் போது என்னென்ன நாடாகும் என்ற த்ரில் மொமெண்ட்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் இன்னொரு surprise இருக்கிறது, அது என்னவென்றால் இது ஒரு நாளில் நாடாகும் கதைபோல தெரிகிறது. மேலும் இந்த படம் ஒன்றரை மணி நேரம் பிரேக் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை திரையரங்கில் பார்க்க செல்பவர்கள் உள்ள போகும்போதே ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கிட்டு போய்டுங்க. ஒன்றரை மணி நேரம் உங்களை கதற விடப்போறாங்க. ஒரு நல்ல பேய் படத்துக்கு ரொம்ப முக்கியம் இசை தான். அது இந்த படத்தில் சரியா அமைஞ்சிருக்கு துன்று சொல்லலாம். ரொம்ப ஒரு மாதிரி திகிலா இருக்கு. படத்தை திரையரங்கில் பார்க்கும்போது இன்னும் பயங்கரமா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22ம் தேதி ரிலீஸ்.
Video: