தொகுப்பாளினியிடம் அத்துமீறல்.. மேடையிலே பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்த மன்சூர் அலி கான்.. வீடியோ வைரல்.

Cool suresh video viral

மன்சூர் அலிகான் நடிக்கும் ‘சரக்கு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தொகுப்பாளரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. எல்லை மீறிய கூல் சுரேஷை மேடையில் மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள். நடிகர் மன்சூர் அலிகான் இடையில் புகுந்து பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்தார்.

நேற்று நடந்த மன்சூரலிகானின் ‘சரக்கு’ பட விழாவில் கூல் சுரேஷ் நடந்து கொண்டது அநாகரீகத்தின் உச்சம். திடீரென ஒரு மாலையை எடுத்து தொகுப்பாளினியான ஐஸ்வர்யாவின் கழுத்தில் அணிவிக்க, பதறிப்போனார் அவர். அதற்கப்புறம் பத்திரிகையாளர்களின் எதிர்ப்பை தொடர்ந்து அப்பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டார் கூல் சுரேஷ்.

Cool suresh video viral

பரபரப்புக்காக ஏதாவது செய்யும் இவரைப்போன்ற அறிவிலிகளை எப்படி இந்த சினிமா மேடைகள் பொறுத்துக் கொள்கின்றன? அவருக்கு நேற்று மற்றும் இணையத்தில் பயங்கரமான hatred பரவியதை தொடர்ந்து விழா முடிந்த பிறகு தனியாக ஒரு வீடியோ ரிலீஸ் செய்து மன்னிப்பும் கேட்டார்.

இந்த கூல் சுரேஷ் மேடையில் தொகுப்பாளரிடம் அநாகரீகமாக நடக்கிறார். எப்படி கைத்தட்டி ரசிக்க முடிகிறது? Clearly the girl is expressing a displeasure for his crude behaviour. Why is he encouraged in promotion meets? என்ற கேள்வியும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ட்ரெண்ட் ஆகவேண்டும் என்று எதாவது செய்வது இப்படி.

Video:

Related Posts

View all