வெங்கட் பிரபு படமா இது.. இப்படி ரத்தம் தெறிக்க மிரட்டி வெச்சிருக்காரு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் படம் கஸ்டடி, தெலுங்கு ஸ்டார் நாக சைதன்யாவை வைத்து இந்த படம் இயக்கிட்டு இருக்காரு. புத்தாண்டை முன்னிட்டு அந்த படத்தின் கிலிம்ப்ஸ் இப்போ ரிலீஸ் பண்ணிருக்காங்க. இப்போ பாருங்களேன் சினிமா எப்படி டெவெலப் ஆகி இருக்குன்னு, எல்லாராலும் எல்லா மொழிகளிலும் போய் படம் எடுக்கமுடியுது. எவ்வளவு நல்ல விஷயம்.
இதற்கு எல்லாம் காரணம் OTTயின் வரவு என்று கூட சொல்லலாம். மக்களுக்கு நல்ல தெரிஞ்சிருக்கு எந்த பதய் திரையரங்கில் பார்க்கவேண்டும், எந்த படத்தை OTTயில் பார்க்கவேண்டும் என்று. ஹீரோக்களை தாண்டி இயக்குனர்களுக்கும் மார்க்கெட் இருக்கு. எடுத்துக்காட்டுக்கு லோகேஷ், வெங்கட் பிரபுவை எடுத்துக்கொள்ளலாம்.
இப்போ தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இயக்குனர் என்றால் லோகேஷ் தான். அதேபோல கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஒரு இயக்குனர் டாப்பில் இருக்கிறார் என்றால் வெங்கட் பிரபு தான். அவர் படங்கள் எல்லாம் வித்தியாசம் தான், அதுமட்டுமில்லாமல் ரொம்ப ஜாலியாவும் இருக்கும். அப்படிப்பட்ட வெங்கட் பிரபு தெலுங்குக்கு போன உடனே ஒரு பயங்கர இன்டென்ஸ் படம் எடுத்திருக்கிறார். இந்த கிலிம்ப்ஸ் பார்த்ததில் இருந்து பயங்கர ஆச்சர்யமாக உள்ளது.
இதுவரை வெங்கட் எடுத்த படங்களிலேயே அதிக மாஸ் சீன்ஸ் உள்ள படம் என்றால் மங்காத்தா தான். அஜீத்துக்காகவே செதுக்கிய படம் அது. அப்படி ஒரு 10 வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு சம்பவம். கஸ்டடின்னு பேர் வெச்சிருக்கோம், காமெடியா பண்ணுவாங்க என்று நீங்க சொல்வது காதில் கெடுகிறது. இப்போ இந்த கிலிம்ப்ஸ் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: