எதோ பெரிய சம்பவம் மாதிரி தெரியுது. வித்யா சூப்பரா இருக்காங்க. ப்ரஜின் மாஸ். டி3 லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு போலீஸ் investigation த்ரில்லர் கதை பண்ணுவது பெரிதல்ல, பார்க்கும் ரசிகர்களை படம் முடியும் வரை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று guess செய்து கொண்டே இருக்கும்படி திரைக்கதை அமையவேண்ண்டும். அதுமட்டுமில்லாமல் கடைசியில் வில்லனை கண்டுபிடிக்கும் போது அடடா இது போல நடக்கிறது என்று ஒரு சோசியல் awareness உடன் படத்தை முடித்தால் அந்த படம் வெர்லெவேலில் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.
சின்னத்திரை சூப்பர்ஸ்டாரா கலக்கி கொண்டிருந்த ப்ரஜின் தற்போது டி3 படம் மூலம் பெரியாத்திரைக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ஹீரோ என்றால் ப்ராப்பர் ஹீரோ. இந்த கதை போலீஸ் கதை என்று இயக்குனர் சொன்னவுடனே உடலை ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டாரு போல, அந்தளவு மாஸாக இருக்கிறார் பார்ப்பதற்கு. போலீஸ் என்ற தோரணை அவரிடத்தில் இருக்கிறது. சரியான அளவில் மீசை, தாடி மிரட்டியுள்ளார் லுக்கில்.
வித்யா பிரதீப் தான் கதாநாயகியா இல்லை அவங்க முக்கியமான ரோல் எதாவது பண்றாங்களா என்று தெரியவில்லை, ஆனால் அவங்க படத்தில் இருப்பது கூடுதல் பலம். சில வெளிநாட்டவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடிச்சிருக்காங்க, படம் கண்டிப்பா அப்படியொரு இன்டர்நேஷனல் லெவல் crime பற்றி தான் பேசுகிறது என்று நினைக்கிறோம். ஆர்கன் திருட்டா கூட இருக்கலாம். எந்த கதை தொட்டாலும் அந்த கதை யாரேனும் ஒருவர் முன்னாடி சொல்லியிருப்பார், அதில் இருந்து எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதில் இருக்கிறது சுவாரசியம்.
சின்னத்திரையில் இருந்து பெரியாத்திரை வந்த வாணி போஜன் தற்போது சினிமா உலகை கலக்கிக்கொண்டிருக்கிறார். அதுபோல பிரஜினும் இந்த படம் ஹிட்டாகி இன்னும் நிறைய நல்ல படங்கள் கொடுக்க வாழ்த்துக்கள். இந்த ட்ரைலர் வீடியோ ரொம்ப சாலிட்டா இருக்கு, சம்பவம் பண்ணும் என்று எதிர்பார்க்கிறோம்.
Video: