டாடா படம் லவ் டுடே மாதிரி சம்பவம் பண்ணும் போல.. ஜாலியா இருக்கு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..
கவின், அபர்ணா தாஸ் நடிப்புல வர்ற 10ம் தேதி ரிலீஸ் ஆகும் படம் டாடா. இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கபோகுது என்பதில் சந்தேகமில்லை. காரணம் இந்த படம் இந்த தலைமுறை லவ் ஸ்டோரி, கவின் படம் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான முன்னோட்டம் ரொம்ப சூப்பரா இருந்துச்சு.
இந்த படம் கண்டிப்பா கவினுக்கு இன்னொரு ஹிட்டா அமையும் என்று எதிர்பார்க்கப்படுத்து. ஆனால் இவருக்கு படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி ரொம்ப நாள் ஆச்சு. இவருடைய போன படம் லிப்ட், ஒரு நல்ல படம் ஆனால் அது OTTயில் ரிலீஸ் ஆச்சு. இருந்தாலும் அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு தான். ஒரு நல்ல டீசண்டான படம் சின்ன மெசேஜ் ஓட.
ஆனால் அபர்ணா தாஸ் தமிழ் சினிமாவிற்கு ஒரு ராயல் என்ட்ரி என்று சொல்லலாம். பீஸ்ட் படம் மூலமா. அதுவும் தளபதி விஜய் கூட. அவங்களுக்கு இரண்டு பேரோட காம்பினேஷன் சீன் கூட இருக்கு. அதனால் இவங்களோட முகம் நல்ல மக்கள் மத்தியில் ரெஜிஸ்டர் ஆயிடுச்சு, பார்த்தவுடனே இந்த பொண்ணா பீஸ்ட் படத்தில் பார்த்தோமே என்று கண்டு பிடிச்சிருவாங்க.
தற்போது காமெடியன்களில் செம்ம பார்மில் இருப்பது யோகி பாபு, VTV கணேஷ் தான். இவரை ரொம்ப பிடிச்சிடுச்சு போல விஜய்க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துட்டு இருக்கார். பீஸ்ட்டை தொடர்ந்து வாரிசு படத்திலும். சில நிமிடங்கள் வந்தாலும் குபீர்ன்னு சிரிக்கும்படி இருந்தது. அதேமாதிரி தான் இந்த டாடா ப்ரோமோவும், செம்ம பன்னா இருக்கு. நீங்களே பாருங்க.
வீடியோ: