ஹீரோயின் மட்டும் செம்மயா அமையறாங்க சந்தானத்துக்கு.. மீண்டும் அந்த படம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சந்தானம் இப்போ கதையின் நாயகனாக பல நல்ல ரோல் எல்லாம் பண்ணிட்டு இருக்காரு. காமெடி மட்டும் இல்லாமல் கொஞ்சம் சீரியஸ் படங்களும் நடிக்க தொடங்கியிருக்காரு. இந்த மாற்றம் கண்டிப்பா அவருக்கு ரொம்ப முக்கியம். ஏனென்றால் சந்தானம் படம் என்றாலே டெம்ப்ளட் படம் என்பதை தாண்டி கதை இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் போல.
இந்த நேரத்தில் ஒரு விஷயம் சொல்ல கடமை பட்டிருக்கிறோம். இந்த மாதிரி ஒரு முயற்சி எடுக்கும் போது பெரிய வெற்றி கிடைக்கலாம் இல்லையென்றால் படுதோல்வி கூட அடையாளம். அப்படி இவர் experiment பண்ணின படம் ஏஜென்ட் கண்ணாயிரம், என்ன தான் நல்ல கதை என்றாலும் பெரிய அளவு ரீச் கிடைக்கல. ஆனால் வசூல் கிடைச்சிருச்சு.
அந்த படத்துக்கு வந்த விமர்சனம் என்னவென்றால் சந்தானம் படம்ன்னா நல்லா ஜாலியா வந்துட்டு சிரிச்சுட்டு போலாம்ன்னு இருந்தோம், ஆனால் இதில் அவ்வளவு காமெடிய இல்லை கொஞ்சம் ஏமாற்றமா தான் இருந்துச்சு என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, சரி மீண்டும் ஒரு படம் காமெடியா பண்ணுவோம் என்று தில்லுக்கு துட்டு படத்தை தூசி தட்டியுள்ளார்.
இந்த படத்தின் மூன்றாம் பாகம் DD returns என்ற பெயரில் வெளிவருகிறது. இந்த படத்தின் டைட்டில் டீசர் தான் தற்போது இணையத்தில் வைர. எப்போவும் போல சந்தானத்தின் காமெடிய சூப்பரா இருக்கு, மேக்கிங் வேற லெவல்ல இருக்கு. கதாநாயகியா சுரபி. ரொம்ப நாள் கழித்து ஒரு தமிழ் படம், அந்த படத்தின் டீசர் தான் இணையத்தில் வைரல்.
Video: