ஆரம்பிச்சாச்சு டிமான்டி காலனி - 2.. இந்த போஸ்டரே இவ்வளவு திகிலா இருக்கே. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இப்படத்தை அஜய் ஞானமுத்து எழுதி, தயாரிக்க அவரது இணை இயக்குநர் வெங்கி வேணுகோபால் இயக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியானது, ஆனால் இப்போது அந்த படத்தை அஜய் தான் இயக்குகிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வந்தது, அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பே தொடங்கிவிட்டது.
அஜய் ஞானமுத்து இதுக்கு முன்னாடி எடுத்த டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் மாதிரி Cobra படமும் content based படமா இருக்க போகுது என்று தான் நாமும் நினைத்தோம். ஆனால், அந்த படத்தின் திரைக்கதையை நன்றாக சொதப்பி விட்டனர். இதற்கு காரணம் கொரோனாவா கூட இருக்கலாம். கொரோனா முதல் அலை வந்தபோது இந்த படத்தின் பல நாள் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல எடுக்க முடியவில்லை. அதனால் கதையை கூட மாற்றி இருப்பார்கள் என்று தோன்றுகிறது முடிக்க வேண்டும் என்பதற்காக.
அஜய் அவர் பெரிய இயக்குனர் தான் என்று மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சினிமாவில் வெற்றி/தோல்வி சகஜம். ஆனால் அந்த process-ஐ தான் நம்ப வேண்டும். காலத்துக்கு தகுந்தாப்போல படம் எடுத்தாலே பொது, ஆனால் அது அவ்வளவு சாதாரணம் இல்லை. தமிழ் சினிமாவின் சிறந்த பேய் படங்களில் ஒன்று டிமான்டி காலனி. அதே போல் சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்து செய்து நடிப்பவர் அருள்நிதி. இவங்க இரண்டு பேரும் மீண்டும் சேருகிறார்கள் என்றால் வெற்றி தான்.
இந்த படம் வந்தபோது சென்னையில் உள்ள டிமான்டி காலனிக்கு நிறைய பேர் படை எடுத்து சென்றனர். பின்னர் அங்கு போகக்கூடாது என்று தடை செய்யப்பட்டது. மேலும், அந்த இடைத்தையே கொஞ்ச நாட்களுக்கு முன்பு தரைமட்டம் ஆக்கினர். வாழ்க்கைல எல்லாரும் அப்பப்ப ஒரு த்ரில் தேவைப்படும் அது டிமான்டி காலனி மாதிரி எதிர்ப்பார்ப்போம் ஆனா அது வேற மாதிரி (படம் பெயர் குறிப்பிட விரும்பவில்லை) வந்து நிற்கும்.