மீண்டும் வருது டிமான்டி காலனி.. ப்ரியா பவானி செம்ம ஹாட்.. அருள்நிதி மாஸ். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
டிமான்டி காலனி படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் எப்போ வந்ததோ அப்போ இருந்தே இந்த படத்துக்கான hype வேற லெவெலில் இருந்து வந்தது. தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களிலேயே இந்த படம் கொஞ்சம் தனித்து நிற்கும். ஏனென்றால் அந்த திரைக்கதை அப்படி, சும்மா வேற மாதிரி சம்பவம் அது.
இப்போது பார்த்தால் இன்றைய தேதியில் அந்த படத்தை எடுத்தே முடிச்சுட்டாங்க. முதல் பாகத்தில் கதாநாயகியே இல்லை ஆனால் இந்த பாகத்தில் கதாநாயகி இருக்காங்க பிரியா பவானி சங்கர் தான் நாயகி. ஹீரோவா அருள்நிதி. அவர் தான் முதல் பாகத்தில் இறந்திட்டாரே என்று கேட்டால் எப்படி மீண்டும் கொண்டு வருவர் என்பதே ஒரு surprise தான்.
இந்த மாதிரி பேய் படங்களுக்கு எல்லாம் ஒரு முக்கியமான விஷயம் தேவை, ஒன்று இசை இன்னோன்னு production value, படத்துக்கு நன்றாக செலவு செய்யும் தயாரிப்பாளரால் தான் இந்த படத்தின் பெஸ்ட் வெர்சனை வெளியில் கொண்டு வர முடியும், அதை சரியாக செய்திருப்பார் என்று தான் தோன்றுகிறது.
அஜய் எடுத்த கடைசி படம் கோப்ரா பல காரணங்களால் பெரிதாக ஹிட் ஆகவில்லை. நல்ல கதைக்களம் கோவிட் வந்ததால் சில காதிகிகள் எல்லாம் அவரால் வெளிநாடு சென்று எடுக்கமுடியவில்லை. படத்தின் நீளமும் ஒரு காரணம், ரொம்ப ஸ்லொவ். இந்த தவறை எல்லாம் திருத்தி செம்ம comeback கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.
Video: