டிமான்டி காலனி படம் இரண்டாம் பாகம்.. செம்ம க்யூட் கதாநாயகி. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Demonty colony latest update

இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு கோப்ரா படம் அவர் எதிர்பார்த்தபடி போகல. விக்ரமுக்கு அது மிகப்பெரிய பிளாப்பா இருக்கு. வசூல்படி ஒரு அளவுக்கு போட்ட பணத்தை recover செய்து இருந்தாலும் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்த்த ஒரு படம் அது. ஆனால் இந்த கொரோனா இதெல்லாம் காரணமாக அவங்கனாலே சரியா ஷூட் செய்யவே முடியல, அதனால் தான் படத்தின் குவாலிட்டி பெரிய படம் மாதிரி இல்ல, விக்ரம் கெட்டப் தான் ஒரே ப்ளஸ் என்று சொல்லலாம்.

படம் பிளாப் ஆயிடுச்சு அதனால் அவர் மீண்டும் ஒரு தரமான இயக்குனர் என்று நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். முதலில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அவருடைய உதவி இயக்குனர் டான் இயக்குவதாக இருந்தது, ஆனால் இப்போது அதை அவரே இயக்குகிறார். எவ்வளவு பிரஷர்-ல் இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பார்.

Demonty colony latest update

டிமான்டி காலனி படம் அப்போது வந்தபோது ஒரு புதுவிதமான பேய் படத்தின் ஒரு சுவாரசியத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. மேலும் அந்த படத்தின் BGM மிகவும் தாறுமாறாக இருந்தது. அதனால் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கும்போது அப்படி ஒரு experience, அப்போதே சொல்லிருந்தார் இரண்டாம் முன்றாம் பாகத்துக்கு கூட கதை இருக்கிறது என்று. அதுபோலவே இப்போ ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.

முதல் பாகத்தில் ஹீரோயின்னே கிடையாது அதுவே பார்ப்பதற்கு அப்படி ஒரு மாதிரி புது விதமா இருந்தது. இப்போது இரண்டாம் பாகத்தில் ஹீரோயின்னா ப்ரியா பவானி பண்றாங்க. அவங்களும் இப்போ சமீப காலமா ரொம்ப நல்ல படங்கள் பண்ணிட்டு வர்றாங்க, இந்த படமும் அந்த லிஸ்டில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் வாங்க இப்போ பார்ப்பதற்கும் செம்ம அழகா இருக்காங்க, முன்னணி நாயகி வேற. இவங்க இருப்பது படத்துக்கு நல்ல ப்ளஸ்.

இந்த படம் எப்போ ஆரம்பிச்சாங்க என்றே தெரியவில்லை, அதற்குள் 40%சதவீதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இந்த படமும் சம்மர் ரிலீஸாக கூட இருக்கலாம்.

Related Posts

View all