முத்துராமலிங்க தேவர் தான் தேசியத்தலைவரா? நேதாஜி வழியில் நடந்தவர். மிரட்டல் வீடியோ வைரல்.
பல அரசியல் தலைவர்களின் பயோபிக் தமிழ் சினிமா தயாரித்து ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் தேவர் வம்சத்தை சார்ந்தவர்களின் ஒரே குறை அவங்க கடவுளாக பார்க்கும் முது இராமலிங்க தேவரின் வாழ்கை வரலாறு இன்னும் படமாக்கப்படவில்லை என்று. அந்த குறை இப்போது தீர்ந்துள்ளது. தேசியத்தலைவர் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியிருக்கிறது. அந்த படத்தின் டீசரை இன்று வெளியிட்டிருக்கிறது படக்குழு.
வரும் அக்டோபர் 30ம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடக்கிறது. அதாவது சும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பிரதமர் பங்கேற்பதாக தகவல் நிலையில்,
முத்துராமலிங்க தேவர் நேதாஜியை பின்பற்றினார். நேதாஜிக்கு ஆதரவா ஆட்களை அனுப்பினார். அக்-30 ஐயா பசும்பொண் முத்துராமலிங்கம் தேவர் குருபூஜைக்கு மோடி வந்தால் அது தேவருக்கு அவமரியாதை. முத்துராமலிங்க தேவர் என்றைக்கும் RSS யையோ அது பேசிய ஆளும் வர்க்க முதலாளிய சித்தாந்தத்தையோ ஏற்றவர் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்கு சாமரம் வீசிய இந்து தேசியவாத கருத்துக்கு எதிரானவராகவும், பிரிட்டிஷ் அரசை எதிர்த்தும், இடதுசாரி கருத்துக்கு ஆதரவாகவும் இறுதிவரை இருந்தார்.
ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக அடையாள அரசியல்வாதிகளால் ஆதிக்க சாதி அடையாள அரசியலின் முகமாக முத்துராமலிங்க தேவர் உருமாற்றப்பட்டுள்ளார். அந்த உருமாற்றத்தின் பயனை இதுநாள் வரை திராவிட கட்சிகள் அறுவடை செய்து வந்தன. இப்போது பாஜக அறுவடை செய்ய நினைக்கிறது,
என்று சமூக வலைத்தளத்தில் பல கருத்துக்கள் தற்போது பரவி வருகின்றன. இந்த நிலையில் தான் இந்த டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.
Video: