கடம்பா இடும்பா முருகா.. திரையரங்கமே அதிர்ந்த பாடல் தேவராளன் ஆட்டம். என்னா டான்சு. வீடியோ வைரல்.
ஒரு படத்தின் ஓட்டத்திற்கு அந்த படத்தின் பாடல் தான் வழிவகுக்கும். பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு மூட் செட் செய்யும். இனி வரும் காட்சிகள் எல்லாம் வேற லேவெல இருக்கும் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். அப்படி பொன்னியின் செல்வன் படத்தில் வரும் தேவராளன் ஆட்டம் பார்ப்பவர்களுக்கு பயத்தை வித்திட்டது, பக்தியை வித்திட்டது வேற என்ன தான் பாடல் பண்ணவில்லை. உடம்பெல்லாம் ஒரு மாதிரி புல்லரித்து கொண்டே தான் இருந்தது. இந்த வீடியோ முடியும்வரை.
இதே பாடலை இன்று காலை கதிரவன் அழகாக வரவர கோவில் மணியோசையோடு கேட்டேன்!! பக்தி கொண்டு விட்டேன்!! வேரும் ஒரே இசையால் பயம் மற்றும் பக்தி இரண்டையும் ஏற்படுத்த முடியும் என்றால் அது ஒருவரால் மட்டும் தான் சாத்தியம் ஆக்க முடியும் “AR.RAHMAN”.
AR ரகுமானின் இசை என்றுமே தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அவ்வாறே இப்பாடலும் திரை அரங்கில் மெய் சிலிர்க்கவும் நடுங்கவும் வைத்தது. புது புது பின்னணிப் பாடகர்களை வெள்ளித்திரையில் அறிமுகம் செய்து அவர்களுக்குரிய அங்கீகாரம் அளிக்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் உண்மையிலேயே சிறந்த மனிதர்..
முருகன், அல்லா, இயேசு கிறிஸ்து, சிவபெருமான், கண்ணன் என அனைத்து மத கடவுள்களின் பாடல்களுக்கும் இசையமைத்த பெருமைக்குரிய தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே.
கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருகா துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய்!!! இந்த வரிகளை கேட்கும் போது மனம் பக்தி பரவசமடைகிறது.
Video: