பா.ரஞ்சித் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் சர்ச்சையான காட்சிகள். போட்டோஸ் வைரல்.
இயக்குனர் பா.ரஞ்சித் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.
காரணம்: பா.ரஞ்சித் சோனி லைவ்க்காக ஒரு அந்தாலஜி ஷூட் செய்தார். அந்த படத்தின் பெயர் தம்மம். அதில் வரும் சில கட்சிகளால் இந்த கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஒரு குழந்தை புத்தர் சிலை மீது ஏறி விளையாடி வரும். மேலும் அந்த காட்சியில் குழந்தையின் தந்தை கண்டிக்க ‘புத்தர் ஒரு கடவுள் அல்ல, அவர் மனிதர் தானே’ என்பது போல வசனம் வருகிறது. இதனால் தான் கடுமையான எதிர்ப்பு.
ஆனாலும் ரசிகர்களால் அந்த படம் ஏற்கப்பட்டது. அந்த அந்தாலஜியில் வந்த படங்களிலேயே இது தான் பெஸ்ட் என்றெல்லாம் கருத்துக்கள் கூறி வந்த நிலையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது இப்போது.
மன்னிப்பு கேட்பாரா பா.ரஞ்சித்?