வெறித்தனமான அறிவிப்புன்னா இது தான்.. அதுக்குள்ள 50வது படம்.. மிரட்டல் போட்டோ வைரல்.
பல பிரபலங்கள் சொல்வது:
மகா நடிகன் நடிப்பின் நாயகன் நடிப்பு அரக்கன் நடிப்பின் அசுரன் மிகச் சிறந்த நடிகர் திறமை மிக்க இளைஞன் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வரம் நொடிப்பொழுதில் சிறுவன் முதல் பெரியவனாக மாறக் கூடியவர்.
இவருடைய பெஸ்ட் performance எது என்று எடுத்து பார்த்தல், ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்ல என்பது போல இருக்கும் அவர் படங்கள். ஆனால் எங்களுக்கு அசுரன் சிவசாமி தான் டாப்.
தன் மகனுக்காக ஊர் மக்க கால்ல விழுற மாதிரி… அவருடைய அந்த body language.. கைல துண்டு.. செருப்ப கழட்டிட்டு கூனிக்குறுகி நிக்கறது… அந்த தெரு முழுக்க போய் எல்லார் கால்லயும் விழறது..னு மனுஷன் பின்னி பெடல் எடுத்திருப்பார்.
எப்படி தந்தை வேடத்தில் தனுஷ் பொருந்துவார்ன்னு யோசித்துக்கொண்டே படம் பார்த்து, முடிந்த பின்பு மொத்தமாய் தனுஷை மறந்திருப்போம்
சிவகாமியாய் வாழ்ந்திருக்கிறார் மனுசன்.
அதிலும் கடைசி காட்சியில் எனக்கு வெற்றிமாறன் முகம் போல தனுஷ் சாயல் ஒரு நொடியில் தோன்றி மறைந்தது.
தனுஷ் என்னும் மகா நடிகன் தற்போது 50வது படத்தில் நடிக இருக்கிறார். இந்த 50வது படத்தை தயாரிக்கப்போவது சன் பிக்சர்ஸ். இந்த படத்தில் தான் தனுஷ் இயக்குனர் அவதாரம் மீண்டும் எடுக்கிறாரா? இல்லை வேற ஒருத்தர் படம் இயக்குகிறாரா? என்று தெரியவில்லை. எல்லாரும் படகின் பெயர் ராயன் என்று சொல்லி வருகின்றனர்.
பொறுத்திருந்து பாப்போம். வெளிவந்த புகைப்படத்தை பார்த்தல் பெரிய சம்பவமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
Dhanush Tweet:
Proud to collaborate with @sunpictures for #D50 Om Namashivaya 🙏🙏🙏 pic.twitter.com/GLcABzmPhl
— Dhanush (@dhanushkraja) January 18, 2023