தனுஷுக்கு மட்டும் அமையுது புது புது ஹீரோயின்னா.. எங்கயோ மச்சம் இருக்கு..லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் மெகாஹிட்டு, இதுவரை வந்த தனுஷ் படங்களிலே இந்த படம் தான் அதிக வசூல் என்று சொல்லபடுகிறது. இன்னும் திரையரங்கில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குள் அவரின் அடுத்த படமான நானே வருவேன் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. எப்படி அருண் விஜய்க்கு இந்த வருடம் இரண்டு படங்களோ, அருள்நிதிக்கு மூன்று படங்களோ.. இந்த வருடம் தனுஷ் ரசிகர்களுக்கான வருடம். ஏனென்றால் இன்னொரு படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
தற்போது இவர் புதிதாக ஷூட்டிங் செல்ல போகும் படம் வெறித்தனமான படங்களை கொடுத்த அருண் மதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர். இவர் தான் வசந்த் ரவி இயக்கிய ராகி, கீர்த்தி சுரேஷ் நடித்த சாணி காகிதம் படங்களை இயக்கிய இயக்குனர். இவர் படத்தில் வில்லனாக சந்தீப் கிஷான் நடிக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று வந்தது. யார் கதாநாயகி கதாநாயகி என்று கேட்டு வந்த நிலையில், இன்று அறிவித்திருக்கிறது படக்குழு.
தமிழில் ஹிட்டுக்கு மேல் ஹிட்டு கொடுத்து வரும் பிரியங்கா மோகன் தான் ஹீரோயின். படத்துக்கு படம் தனுஷுக்கு புது புது ஹீரோயின் அமையுது. இந்த வருடத்திலேயே நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவனி சங்கர், ப்ரியங்கா மோகன், சம்யுக்தா மேனன், இந்துஜா ரவிச்சந்திரன், பாரின் ஹீரோயின் எல்லி அவ்ராம் போன்ற நாயகிகளோடு நடித்து சாதனை படைத்துள்ளார். இது எல்லாம் யாருக்கு நடக்கும்? மச்சக்காரன் அவரு.
தற்போது மீண்டும் ஒரு அப்டேட் என்னவென்றால் தனுஷ் நடிக்கும் வாத்தி படம் வரும் டிசம்பர் 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பு வெளியானது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.