மாமனார் கூடையும் நடிக்கிறாரு, மருமகன் கூடையும் நடிக்கிறார்.. சரி எக்ஸ் தான்.. லேட்டஸ்ட் அப்டேட்/போட்டோ வைரல்.
தனுஷ் அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் படம் கேப்டன் மில்லர், இந்த படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக சென்றுகொண்டிருக்கிறது. அடுத்த வருடம் ரிலீஸ் ஆகப்போகும் பெரிய படங்களில் இந்த படம் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் பெயர்கள் ரொம்ப பெருசு. இப்போ இந்த படத்தில் புதிதாக add ஆகி இருப்பவர் கன்னட சூப்பர்ஸ்டார்.
அட வேற யாரும் இல்லங்க கருனாட சக்ரவர்த்தி என்று ரசிகர்களால் அதிகம் அழைக்கப்படும் சிவராஜ்குமார் தான். இவரை தெரியாதவங்க இல்லை. ஆனாலும் சொல்கிறோம், மறைந்த புனீத் ராஜ்குமார் அவர்களின் அண்ணன். முந்தைய கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மகன். இவருக்கு தான் இப்போ கன்னட சினிமா உலகில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி எல்லா மாநிலத்தில் இருந்து முக்கிய நடிகர்கள் எல்லாம் சேர்ந்து நடித்தால் மொத்த இந்தியாக்கும் சவுத் சினிமா சவால் விடும் என்பதில் சந்தேகமில்லை. தனுஷ் இந்த படத்தை ரொம்ப நம்புறாரு. இயக்குனர் அருண் மதீஸ்வரன் மேக்கிங் எப்போவுமே சூப்பரா இருக்கு. இரண்டு படங்கள் பண்ணிருக்காரு. ராக்கி, சாணி காகிதம். இரண்டிலும் அவர் எந்த மாதிரியான இயக்குனர் என்று மொத்த இந்திய சினிமாக்கும் காட்டியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ஷிவா ராஜ்குமார் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரள் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இரண்டு பேர் ex-மாமனார், மருமகன் (ரஜினி தனுஷ் பார்வையில்) நடிக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த படத்தில் தனுஷின் அண்ணன் ஆக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது, ஜெயிலர் படத்தில் வில்லன் அவரு.