முதலில் ஐஸ்வர்யா கூட.. இப்போ தனுஷ் கூட.. என்னடா நடக்குது. லேட்டஸ்ட் அப்டேட். முழு விவரம்.
தனுஷ் இப்போ அடுத்தடுத்து படம் ஆகிட்டே இருக்காரு. அவருக்குலையும் ஒரு இயக்குனர் இருக்காரு அவரு எப்போ வெளிய வருவாரு என்று காத்துக்கிடக்கிறோம். இப்போ அந்த இயக்குனர் வெளியில் வரப்போறாரு போல. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஹீரோ கூட டேட்ஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன.
பவர் பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கி வந்த திரைப்படம் " நான் ருத்ரன் " 🔥. வரலாறு சிறப்புமிக்க இந்த படம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 600 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல ஒரு பிளாஷ்பேக் பகுதியும் இப்படத்தில் உள்ளது என கூறப்படுகிறது. இயக்குனராக கடைசில படம் முடிந்ததும் விழுந்த கை தட்டல்கள் தனுஷ் ஜெயித்துவிட்டார் என்பதற்கு சான்று.
அந்த நடிகர்கள் யாரென்றால் விஷ்ணு விஷாலும், எஸ்.ஜெ.சூர்யாவும் என்று சொல்லப்படுகிறது. இப்போ தான் ஐஸ்வர்யா தனுஷ் முன்னாள் மனைவி இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கமிட் ஆகி நடிச்சுட்டு இருக்காங்க. இப்போ தனுஷ் இயக்கத்தில். எப்படி இரண்டு படமும் ஒரே நேரத்தில் பண்ணுவாரா? இல்லை வெயிட் பண்ணி அந்த படத்தை முடிச்சுட்டு பண்ணுவாரா என்று தெரியவில்லை.
எப்படியோ தனுஷ் மீண்டும் இயக்குனர் ஆக போறாரு. இந்த படத்தில் எஸ்ஜே.சூர்யா இருப்பதால் ஹீரோ வில்லன் மாதிரி கதை இருக்குமா அந்த பீல் குட் படமாக இல்லாமல் என்று நினைக்கவும் தோன்றுகிறது. ஏதோஒன்று நமக்கு தனுஷ் இயக்கத்தில் இன்னொரு படம் வந்தால் போதும். கண்டிப்பா தரமா தான் இருக்கும் என்று நம்புகிறோம்.