தனுஷுக்கு மட்டும் அமையுது. அடுத்த மூவி இந்த பெரிய இயக்குனர் கூட கமிட் ஆகிட்டாரு. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Dhanush latest movie update

தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை அடுத்து இவர் நடிக்கவிருக்கும் படம் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன். அவருடைய பெயர் சேகர் கம்முலா. பிடா, ஹாப்பி டேஸ், லவ் ஸ்டோரி போன்ற தரமான பீல் குட் படங்களை இயக்கிய இயக்குனர். தனுஷ் கிட்ட இருக்கும் ஒரு நல்ல விஷயம் இது தான், நல்ல தரமான கதைகளை தேடி தேடி செலக்ட் செய்வாரு. ஒரு சில படங்கள் மிஸ் ஆகலாம் மாறன் படம் மாதிரி. ஆனால் வித்தியாசமான படங்கள் பண்ணவேண்டும் என்பது அவரின் விருப்பம்.

2021ம் ஆண்டே இந்த செய்தி வந்தது, தனுஷ் இந்த இயக்குனருடன் கமிட் ஆகியிருக்கிறார் என்று. ரொம்ப நாள் கழித்தும் அப்டேட் வராததால் இந்த படம் டிராப் ஆயிடுச்சு என்று எண்ணினோம். யாரும் எதிர்பார்க்கத நேரத்தில் பூஜையை நேற்று போட்டுள்ளனர். இது தமிழ் சினிமாவிற்கு நல்ல விஷயம் ஏனென்றால் இந்த படம் பேன் இந்தியா மல்டி lingual படம்.

Dhanush latest movie update

இப்போது போல தமிழில் படத்தை எடுத்துவிட்டு தெலுங்கு, மலையாளத்தில் எல்லாம் டப் செய்யமாட்டாங்க. எடுப்பதே தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில். இதுதான் தனுஷுக்கு straight பான் இந்தியா படம். இப்போது இருக்கும் நடிகர்களில் தனுஷ் ஒருவரால் மட்டும் தான் தமிழ் சினிமாவை உலக லெவெலுக்கு எடுத்துட்டு போக முடியும். மற்ற நடிகர்கள் போல தமிழ் மட்டும் இல்லாமல், ஹாலிவுட் வரைக்கும் போய்ட்டாரு. தமிழனா நமக்கே இது பெருமை.

இந்த படம் 150 கோடி பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளது. அரசியல் படம் வேற. தனுஷுக்கு இந்த மாதிரி கதை எல்லாம் கேக் வாக். அசால்ட்டா நடிச்சுட்டு போயிட்டே இருப்பார். எப்போடா ஷூட்டிங் தொடங்கும் என்று ஆவலுடன் காத்துக்கிடக்கிறோம்.

Pooja Photos:

Related Posts

View all