அடியாத்தி இது என்ன 'பீல்'லு.. உன்னால நான் பெயிலு.. அப்படி ஒரு ரொமான்ஸ். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படம் மாதிரி இன்னொரு செம்ம பீல் குட் படம் ரெடி. இந்த மாதிரி கதையெல்லாம் சரியா தனுஷுக்கே போய் சேருது. அதுவும் சரிதான் அவர்னாலே மட்டும் தான் இந்த மாதிரி கதை எல்லாம் எமோஷன்ஸ் எவ்வளவு தேவையோ, அவ்வளவு சரியா கொடுத்து நம் மனதுக்கு இதமாய் பீல் பண்ண வைக்க முடியும். இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவிற்கு அடிக்கடி தேவை. சம்யுக்தா மேனன்க்கு இந்த படம் சூப்பர் தமிழ்ல டெபுட்டா இருக்க போகுது.
இவ்வளவு நாள் ஏன் சுவேதா மோகன் தமிழில் பாடல் பண்ணவில்லை, ஏன் எந்த இசையமைப்பாளரும் இவங்கள மெலடி பாட கூப்பிடவில்லை என்று கோவம் வருகிறது. இந்த பாடல் அவ்வளவு அழகாக இருக்க காரணமே அவங்களோட வாய்ஸ் தான். இன்னொன்னு இந்த பாடலின் வரிகள், இதை எழுதியது நம்ம பொயட் தனுஷ் அவர்கள் தான். எப்படி ஒவ்வொரு படத்துக்கும் இவ்வளவு அழகான பாடல் இவரால் எழுத முடியுது என்று தெரியவில்லை.
சம்யுக்தா மேனன் மற்றும் தனுஷ் இருவரும் திரையில் பார்க்க ஒரு செம்ம பேர் போல தெரியுறாங்க. படம் பீரியட் படம் போல தெரிகிறது. ஏனென்றால் அதில் வரும் காட்சிகள் எல்லாம் அதை தான் உணர்த்துகிறது அல்லது இது flashback portion ஆக கூட இருக்கலாம். கதை என்னவென்றால் education சிஸ்டம்-ல் இருக்கும் ஓட்டையை பற்றி பேசுகிறது. ஒருவன் எதிர்க்கிறேன், அதனால் வரும் பிரச்னை என்ன. முதலில் எது என்ன ஓட்டை என்று அரசாங்கத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டவுள்ளது இந்த படம்.
தனுஷ் இந்த படத்தை நம்பி ஒரு தெலுங்கு இயக்குனருடன் நீங்க பண்ணுங்க என்று கொடுத்திருக்கிறார் என்றால், இது தான் காரணம். கண்டிப்பா கதை ரொம்ப செமய்யா இருக்கப்போகுது. கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியான டீசர் அதை உணர்த்தியது. டிசம்பர் மாதம் வெளியீடு என்று சொன்னார்கள், ஆனால் 2023ல் தான் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இன்னும் அதைப்பற்றி எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. அதுவரை இந்த பாடலை ரசிப்போம்.
Video: