என் துணைக்கு நீதான் என்றும் இது மாறாதே.. ராஜா ராஜா தான்.. விடுதலை வீடியோ வைரல்.
இரைச்சல், வேகம், சச்சரவு மிகுந்த வாழ்வியலுக்கு இடையே சற்று இளைப்பார வைத்தமைக்கு நன்றிகள் பல என்பது தான் இந்த பாடலை கேட்டவுடன் ரசிகர்களின் கருத்தாக இருக்க முடியும். இப்படி இசையமைத்து பாடல் வந்து எவ்வளவு காலம் ஆச்சு. ராஜ ராஜ தான் இன்னும் டச் இருக்கு. இசைக்கேற்ற தலைக்கனம் இருப்பது தப்பில்லை தான் போல.
இளையராஜா பாடல் என்பதால் ரசிகர்கள் பூரிச்சு போய் போட்ட கருத்துகள் பாருங்களேன்: ஒன்னோட நடந்தா கல்லான காடு🌳 கல்லான காடு ஒன்னோட நடந்தா👣 வார்த்தைகள் இடமாறினாலும் மெட்டுக்களை கட்டமைக்கும் காரியவாதி இசைஞானி🎼
கண்களை மூடிக்கொண்டு இந்த பாடலை கேட்டால், தன்னை மரந்து எங்கேயோ செல்வது போலவே தெரியும்.
ரொம்ப நாள் ஆச்சி இதுபோல் மனதை வருடும் இசையையும், பாடல் வரிகளையும் கேட்டு.
2.44 யாரும் மயங்கிவிடும் இசை இசைஞானி இளையராஜா அய்யாவிடம் இருந்து தாலாட்டி சென்றது தனுஷ் அண்ணாவின் குரலும் ஈடு குடுத்தது.
இனிமையான காலங்களின் இசைக்கு மயங்காத எவருமில்லை இசைஞானி ஐயா அவர்களின் இசையரசனாக பாடிய எங்கள் தனுஷ் அண்ணாவின் மிகவும் அருமையான அற்புதமான பாடல்.
பாடல் வரிகள் அருமை, பாடிவயர்கள் பாடலுக்கு அழகை கூட்டியுள்ளனர். இசைஞானி என்றுமே இசைஞானி தான். இப்பாடலுக்கு மெருகேற்றிய அனைவருக்கும் நன்றி.
வீடியோ: