தனுஷ் வாய்ஸ்ல ஒரு மேஜிக் இருக்கு.. அவ்ளோ இதமா இருக்கு கேட்க கேட்க.. வாத்தி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Dhanush vaathi song video viral

தனுஷ் அடுத்து நடித்து வெளிவர இருக்கும் படம் ‘வாத்தி’. இந்த படத்துக்கு செம்ம எதிர்பார்ப்பு. தனுஷ் முதன்முறையா தெலுங்கு இயக்குனர் கூட சேர்ந்து ஒரு படத்தை பண்ணி முடிச்சிருக்காரு. இந்த படத்தின் முதல் சிங்கிள் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகுது. சரி அதற்கு முன்னரே இந்த படத்தின் அந்த முதல் சிங்கிள் பாடல் வரிகளை பாடி ரசிகர்களுக்கு surprise கொடுக்கலாமே என்று வீடியோ ஒன்று ரிலீஸ் பண்ணிருக்காரு நம்ம தனுஷ்.

முதலில் இந்த படத்தை வாத்தி அப்டின்னு டைட்டில் வெச்சுட்டு ஸ்டுடென்ட்டாவா நடிப்பாங்க. அருமையான பிளாஷ்பாக் portion ஒன்னு படத்தில் இருக்கு,அதற்காக தான் அந்த ஸ்டுடென்ட் கெட்டப். தனுஷுக்கு தான் எந்த கெட்டப் போட்டாலும் செட் ஆகுமே, அவர் முகம் அப்படி. தடியை எடுத்துவிட்டு குழந்தை மாதிரி நடிக்கவும் தெரியும், தாடியுடன் அசுரத்தன்மை நடிப்பையும் வெளிப்படுத்த முடியும். இந்த படத்திலும் இரண்டு பரிமாணங்கள் இருக்கிறது.

Dhanush vaathi song video viral

வாத்தி படத்தின் பெயரே. படம் சொல்லிக்கொடுப்பவர். ஆனால் educational சிஸ்டம்-ல் இருக்கும் ஒரு ஓட்டையை எதிர்த்து கேள்வி கேட்கும் வாத்தி, இது தான் படத்தின் மையக்கரு. கதைக்குள் சென்றவுடன் ஒரு அரசாங்கத்தையே எதிர்க்கும் இவரின் பயணம் எப்படி இருக்கிறது என்பதை தான் வாத்தி படம் பேச இருக்கிறது. நிறைய அரசியல் வசனங்கள் இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் டீசரில் அதை பற்றி பெருசா ரிவீல் பண்ணல, ரசிகர்களுக்கு ஆனால் பெரிய சுரபிரிஸ் இருக்கு.

இந்த படத்தின் நாயகி சம்யுக்தா மேனன். இந்த படத்திற்கு பின் இவங்களுக்கு நிறைய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் தமிழில். இப்போதே கைவசம் நிறைய படங்கள். தெலுங்கில் அடுத்தடுத்து படம் பண்ணிட்டு இருக்காங்க. இந்த பாடலில் இவங்களும் feature அவங்க என்று நினைக்கிறோம், தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பாடி அசத்திருக்காரு தனுஷ் இந்த வீடியோல.

Video:

Related Posts

View all