எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனுஷ் பிச்சு உதறாரு.. செம்ம க்யூட் சம்யுக்தா. வாத்தி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Dhanush vaathi trailer video viral

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பை விட தன் மதம் தான் முக்கியம் என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் நாட்டின் அழிவின் பொறுப்பாளிகள். ஏன் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறோம் என்றால் இங்கு இதை வைத்து தான் பல வருடங்களாக அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. ஒருவனை படிச்சு முன்னேற வைக்க வேண்டும் என்பதை விட மத வெறி அதிகமா இருக்கு.

படிப்பை விட பணம் வாழ்க்கையில முக்கியமா ஒன்று இருப்பதாலதான், அந்த படிப்பையே பணம் கொடுத்து படிக்கிறோம் என்பது ஒரு கருத்து. பணத்தைவிட வாழ்வில் கல்வி முக்கியம் அதனால் தான் பணத்தை கொடுத்துவிட்டு கல்வியை வாங்குகிறோம். இது இன்னொரு சிலரின் கருத்து ஆனால் வாதி படம் பேசியிருப்பது இது இரண்டும் அல்ல.

Dhanush vaathi trailer video viral

படிப்பு வந்து பிரசாதம் மாதிரி அள்ளி கொடுக்கணும் என்பது தான். இந்த காலத்துக்கேற்ப தேவையான படம் தான். ஏனென்றால் தனுஷ் மாதிரி முன்னணி நடிகர்கள் ஒரு கருத்தை சொல்லும்போது வைடா போய் சேரும். எப்போதும் விஜய், அஜித் தான் கருத்து சொல்லனுமா. தனுஷ் தான் அடுத்த ஜெனெரேஷன் ஸ்டார். ஆரம்பிக்கட்டுமே இங்க இருந்து.

படம் கல்வியின் முக்கியத்துவம் பற்றி தான் பெருசா பேசியிருக்கிறது. அதில் கொஞ்சம் லவ்வு, காமெடி இதெல்லாம் இருந்தால் தானே அது கமர்சியல் படம். அதுமட்டுமில்லாமல் இது பீரியட் படமும் கூட. தனுஷ் வாத்தியாக எப்படி மிரட்டவுள்ளார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம். சம்யுக்தாக்கு செம்ம சூப்பர் தமிழ் டெபுட். தெலுங்குல ஏற்கனவே அவங்க ஸ்டார்.

வீடியோ:

Related Posts

View all