ஆமா அவங்களை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அதுக்கென்ன? பாலாஜி மோகன் லேட்டஸ்ட் அப்டேட்.
கல்யாணம் என்பது நான்கு சுவர்களால் சூழப்பட்ட வெற்றிடத்தை ஒரு குடும்பமாக. அதை மாற்றுவது பெண் தான். அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு கலை. அதை அவர்கள் அன்பால் அக்கறையால் மாற்றுகிறார்கள். கொஞ்சம் காமெடியா சோழனும் என்றால், காதல் என்பது நீண்ட அழகான மழைகால கனவு. கல்யாணம் என்பது ரெட் அலார்ட்..
அதே மாதிரி விவாகரத்து என்பது ஒரு சோகமான முடிவு இல்லீங்க, அது.. நம்பிக்கை நிறைந்த ஒரு புது துவக்கம்ங்க தன்னோட விவாகரத்தை கேக் வெட்டி கொண்டாடிய பெண்ணை நாம் கொஞ்ச நாட்களுக்கு முன் பார்த்தோம். இப்டித் தான் தைரியமா வாழ்க்கைய எதிர்கொள்ளணுங்க.
நடிகர் இயக்குனர் பாலாஜி மோகனை நாம் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி 1, 2 எடுத்த இயக்குனர். ஏற்கனவே இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஆனால் ஒரு சில காரணமாக விவாகரத்து ஆயிடுச்சு. வரும் ஜனவரி மாதம் இவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்காரு. அதன் updates இப்போ கொஞ்ச நாட்களில் வந்துவிடும்.
தன்யா ஒரு நல்ல நடிகை, நிறைய கன்னட படங்கள் பண்ணிருக்காங்க. தமிழிலும் சில நல்ல படங்கள் பண்ணிருக்காங்க. பாலாஜி கூடவும் படம் பண்ணிருக்காங்க. அப்போது ஏற்பட்ட பழக்கம் போல, அதனால் இருவரும் கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்காங்க போல. அது அவங்களின் தனிப்பட்ட விருப்பம். அதில் கருத்து தெரிவிக்கும் உரிமை நமக்கு இல்லை.