🎬 வாழை வெற்றிக்கு பிறகு – மாரி செல்வராஜ் அடுத்த வெற்றி ‘பைசன்’! தன் உழைப்பால் தந்தையை மிஞ்சும் த்ருவ் விக்ரம்

Dhruv vikram bison movie mari selvaraj struggle

🎥 ‘Bison’ – தந்தை விக்ரமின் மகனாக அல்ல, தனி அடையாளத்துக்காக போராடும் த்ருவ் விக்ரம்

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் மகனாக அறிமுகமான த்ருவ் விக்ரம், அதித்ய வர்மா, மகான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவர் சொல்வதுபோல, அவை அவரது உண்மையான பயணத்தை காட்டவில்லை. அவர் “என் பெயர் த்ருவ், இரண்டு படங்கள் செய்திருக்கிறேன், பார்த்திருக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. ஆனால் Bison கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது தான் என் உண்மையான முதல் படம்” என்று தெரிவித்துள்ளார்.

Dhruv vikram bison movie mari selvaraj struggle



ison திரைப்படம் இயக்குநர் மாரி செல்வராஜ் கையில் உருவாகி வருகிறது. சமூக அரசியலை வலுவாக பேசும் படங்களை உருவாக்கும் இவர், த்ருவைத் தேர்வு செய்தது அவரது career-க்கு ஒரு பெரிய சவால். த்ருவ் ஆரம்பத்தில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தார். இதை பற்றி மாரி செல்வராஜ் கூறியதில் தான் அவரது dedication தெரிகிறது.

Dhruv vikram bison movie mari selvaraj struggle

திரைப்படத்தைத் தொடங்கியபோது த்ருவ் மிகவும் சிரமப்பட்டார். நான் கூட மற்றொரு கதை எடுக்கலாம் என்று சொன்னேன். ஆனால் த்ருவ், இது மிகவும் கடினமானது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் இத்தனை ஆர்வத்துடன் செய்வதால், நான் உங்களை என் அப்பாவாக நினைக்கிறேன். நீங்கள் என்னை கவனித்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என்று சொன்னார்” என்று மாரி செல்வராஜ் உருக்கமாக பகிர்ந்தார்.

இந்த வார்த்தைகள் இயக்குநரின் மனதை அதிர வைத்தது. ஒரு நடிகன் தனது இயக்குநரை தந்தை போல நினைத்து முழு நம்பிக்கையுடன் பணியாற்றுவது அரிதான விஷயம். அதுவே Bison படத்தின் மீது த்ருவின் முழு அர்ப்பணிப்பை காட்டுகிறது.

Dhruv vikram bison movie mari selvaraj struggle

த்ருவ் விக்ரம், விக்ரமின் மகனாக மட்டும் அல்லாமல், தனி நடிகனாக தனது இடத்தை பிடிக்க போராடி வருகிறார். Bison மூலம் அவர் தனது 100% உழைப்பையும் கொடுத்து, ரசிகர்களிடம் புதிய தோற்றத்தை அளிக்க உள்ளார்.

Dhruv vikram bison movie mari selvaraj struggle

மாரி செல்வராஜ் – த்ருவ் விக்ரம் கூட்டணி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தோடு, நண்பர்களோடு அல்லது காதலருடன் கூட சென்று பார்க்கக்கூடிய வகையில் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, Bison திரைப்படம் த்ருவ் விக்ரமின் career-க்கு உண்மையான திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லலாம்.

Related Posts

View all