ப்ரியாமணி செம்ம கெத்தா இருக்காங்க பாக்க தீ மாதிரி. செம்ம அப்டேட். லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
நடிகை ப்ரியாமணி என்றாலே நம் நினைவுக்கு வருவது பருத்திவீரன் படம், அவங்க அதற்கு பின் எவ்வளவு படங்கள் பண்ணினாலும் பருத்திவீரன் படம் அவங்களுக்கு ஒன்ஸ் இன் a lifetime experience. எல்லா கதாநாயகிகளுக்கும் அவங்க சினிமா வாழ்க்கையில் ஒரு அடையாளம் இருக்கும், அப்படிப்பட்ட அடையாளம் தான் இவங்களுக்கு அந்த பருத்திவீரன் படம். இவங்க ஒரு வெர்சடைல் கதாநாயகி, எந்த ரோல் கொடுத்தாலும் மாஸ் பண்ணுவாங்க.
சமீபத்தில் ராணா, சாய் பல்லவி கூட நடிச்ச படத்துல இவங்க ஒரு போராளி, தி பேமிலி மேன் வெப் சீரிஸ்ல ஒரு போலீஸ்காரனுக்கு மனைவி, ஆனால் அவங்களுக்கு ஒரு தனி ட்ராக் வெச்சிருப்பாங்க செம்ம இன்டெரெஸ்டிங்கா. சமீபத்தில் தொட்டதெல்லாம் செம்ம ஹிட்டு. இப்போ இருக்கும் கதாநாயகிகள் தைரியமா சோலோ ஹீரோயின் படம் பண்றது வரவேற்கத்தக்கது. முன்னாடி தான் அப்படி எந்த தயாரிப்பாளருக்கும் துணிவு இல்லை.
ஆனால் இப்போது எப்படி படத்துக்கு படம் ஆடியன்ஸ் அப்டேட் ஆகிட்டே வர்றாங்களோ அதேபோல் நடிகர் நடிகைகள் தயாரிப்பாளரும் அப்டேட் ஆகணும். இப்போ எல்லாம் ஒரு நல்ல கதை இருந்தால் பொது, முதல் ஷோ முடித்தவுடன் ஒரு நல்ல வர்ட் ஆப் மௌத். அந்த படம் பெரிய ஹிட் அடிக்கும். அதேபோல் மோசமாக இருந்தால் படுத்துவிடும், அவ்வளவு தான்.
தற்போது மீண்டும் தமிழில் கலக்க ப்ரியாமணி எடுத்திருக்கும் அவதாரம் தான் இந்த சோலோ ஹீரோயின் படம். படத்தின் பெயர் “DR-56”. இந்த படம் ஒரு பான் இந்தியா படம். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தான் சமூக வலைத்தளங்களில் இப்போது ட்ரெண்டிங். ப்ரியாமணி பாக்க நச்சுன்னு தீயா இருக்காங்க.. படம் நின்னு பேசும் என்று நம்புவோம்.