இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு இவரை. செம்ம சேட்டை. ஜாலியா இருக்கும் போலயே. DSP லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிவால மட்டுமல்ல இந்திய சினிமாவில் செமயான கதைகள்ல தேர்ந்தெடுத்து நடிக்குறது விஜய் சேதுபதி தான். கடைசியா நடிச்ச படங்கள் எல்லாமே தரம். நீண்ட நாட்களை வில்லன், சப்போர்டிங் ரோல்ல பார்த்த விஜய் சேதுபதியை மீண்டும் ஹீரோவா பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. ஹீரோவா நடிக்கும் எல்லா படங்களும் நல்லா ஓடவில்லை என்றாலும், என்டேர்டைன்மெண்ட் இருக்கும்.
இந்த DSP படம் அந்த லிஸ்டில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி நிறைய கன்டென்ட் ரோல் பண்ணாலும் பராவாயில்லை ஒரு படம் ஜாலியா கமர்ஷியலா நடிச்சுட்டு போய்டணும் ரசிகர்களுக்காக. அவர் அந்த மாதிரி ரோல் ரொம்ப நல்லா பண்ணுவாரு ஆனால் சமீப காலமாய் அது பண்ணுவதில்லை. இந்த படம் அந்த குறையை தீர்த்து வைத்துவிட்டது.
நாம் அவர் நடிச்ச சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான், சூத்து கவ்வும் படங்களை எல்லாம் எவ்வளவு ரசிச்சோம். அந்த என்டேர்டைன்மெண்ட் factor தான் சமீபத்தில் வந்த அவிஜய் சேதுபதி படத்தில் மேஜர் மிஸ்ஸிங். இந்த படத்தில் காமெட்ய்க்கு பேய்கள் இருக்காரு, நல்ல ஸ்கோப் இருக்கும் போல. நிறைய சின்ன ரோல் பண்ணின அவருக்கு இதுவொரு பிரேக் கொடுக்கும்.
இந்த படகின் கதான்யாகி அனுகீர்த்தியை விட சிவனை இந்த படத்தில் எப்படி நடிச்சிருப்பாங்க என்ற என்ற ஒரு விஷயம் தான் மனதுக்குள் ஓடிட்டே இருக்கு. அவங்க ஹீரோயின் material, ஏன் சைடு ரோல் மட்டுமே பண்ணிட்டு இருக்காங்க என்று தெரியவில்லை. சின்ன வயசு, மற்ற மொழிகளிலும் நடிக்கலாம். பார்ப்போம் இந்த படம் எப்படி இருக்குதுன்னு.
Video: