அடுத்த KGF லோடிங்.. துல்கர் சல்மான் மாதிரி ஸ்கிரிப்ட் choose பண்ணுங்க போதும். லேட்டஸ்ட் கொல மாஸ் போஸ்டர் வைரல்.

Dulquer salmaan in king of kotha

எல்லா மொழி சினிமா நடிகர்களும் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும், அவங்க எவ்வளவு versatile படங்கள் செலக்ட் செய்து நடிக்கிறார்களோ, அது அவர்களுக்கு அவ்வளவு நல்லது. இனி வரும் காலங்களில் மிகவும் கடும்போட்டி நிலவும். நல்ல படங்கள் எந்த மொழியில் இருந்தாலும் மக்கள் தேடி பிடித்து பார்த்துவிடுவார்கள். ஏனென்றால் அவங்களுக்கு அவ்வளவு source இருக்கிறது படம் பார்க்க.

அதனால் எல்லா மொழிகளிலும் உங்கள் முகம் பரிட்சயம் அடைய வேண்டும், அதற்கு நீங்க அதற்கேற்றாற்போல ஸ்கிரிப்ட் செலக்ட் செஞ்சு மக்களை என்டேர்டைன் செய்யவேண்டும். இந்த காலத்து ரசிகர்கள் மிகவும் ஸ்மார்ட். எதாவது ஒன்று பண்ணி ஏமாற்றி விடலாம் என்று எண்ணினால் அது நெகட்டிவாக தான் செல்லும். இதை இயக்குனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நடிகர் துல்கர் சல்மான் சிறந்த எடுத்துக்காட்டு. இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஒரு பான் இந்தியா சுப்ஜெக்டாக மாறுவது அதிசயமாக இருக்கிறது. எந்த மொழி எடுத்தாலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பான் இந்திய லெவெலில் சீதா ராமம் என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்தார், அதற்கடுத்து ஒரு டைரக்ட் ஹிந்தி படம் ‘chup’, அந்த படமும் வேற லெவல் ஹிட். இப்போது அடுத்த வேட்டைக்கு தயாராகிவிட்டார்.

இவரின் அடுத்த படம் ‘கிங் ஆப் கோதா’, இது ஒரு ப்ரொபேர் பான் இந்தியா சப்ஜெக்ட். ஒரு தரமான காங்ஸ்டர் படமாக இருக்கப்போகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு பின் இவரின் அந்தஸ்து மீண்டும் உயரும். நேற்று வெளியான இந்த படத்தின் லூக்குக்கு அவ்வளவு வரவேற்பு. இவர் தான் சீதாவுடன் அப்படி உருகி உருகி ரொமான்ஸ் செய்ததா என்ற கேள்வி எழுகிறது. அந்த லாவுக்கு changeover.

Dulquer salmaan in king of kotha

Related Posts

View all