இந்த படம் பெரிய சம்பவம் பண்ணும். பாபி சிம்ஹா வேற லெவல் லுக்கு. தக்ஸ் போஸ்டர்/வீடியோ வைரல்.

Durai thugs poster viral

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இப்படியொரு படம் பண்ணுவாங்க என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டாங்க. சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு மேல இருக்காங்க. இவங்க ஒரு சக்சஸ்புல் நடன இயக்குனர் மட்டுமல்ல ஒரு படத்தின் இயக்குனராகவும் வெற்றி பெற வேண்டும் என்று களத்தில் இறங்கிருக்காங்க. இவங்க இயக்கத்தில் வெளிவந்த ‘ஹே சினமிக்கா’ ஒரு நல்ல பீல் குட் படம். ஆனால் அதற்கு பின்னர் இப்படியொரு முரட்டு சம்பவம் பண்ணுவாங்க என்று எதிர்பார்கல.

thugs அப்டின்னு டைட்டில் வெக்கிறதுக்கே ஒரு தல் வேணும். காரணம் அது அப்படியொரு powerful ஆன டைட்டில். இந்த தலைப்பு மூலமே மக்களுக்கு இது எப்படிப்பட்ட படம் என்று ஏறக்குறைய தெரிஞ்சிருக்கும். அந்த அளவுக்கு படத்தின் கன்டென்ட் இருந்தால் மட்டுமே அடுத்ததுது நல்ல விமர்சனங்கள் எல்லாம் வந்து படம் கரை சேரும். சமீபத்தில் வெளிவந்தகதாபாத்திரங்கள் introduce பண்ணின வீடியோ அவ்வளவு பிருட்டல்லா இருந்தது, பிருந்தா தான் டைரக்ட் பண்ணிணாங்களா என்ற அளவுக்கு.

Durai thugs poster viral

நேற்று பாபி சிம்ஹாவோட பிறந்தநாள். இந்த மாதிரி தமிழ் சினிமாவில் காங்ஸ்டர் படம் எல்லாம் வருது என்றாலே அதில் சிம்ஹாக்கு ஒரு ரோல் கண்டிப்பா இருக்கும். இன்னும் ஜிகர்தண்டா ஏற்படுத்தின தாக்கம் அப்படி. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ரிலீசான மகான் படத்தில் கூட வேற லெவல் சம்பவம் பண்ணினார். இளமையான வயது முதல், வயதான தோற்றம் வரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அவரின் பிறந்தநாளான நேற்று, அந்த thugs படத்தின் அவரது கதாபாத்திரம் பெயரை வைத்து போஸ்டர் ரிலீஸ் செய்து படக்குழு surprise செய்துள்ளது. இந்த துரை என்னும் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு மக்கள் மனதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வடசென்னை மாதிரி இருக்கும் என்று நினைக்கிறோம்.

Teaser:

Related Posts

View all