ஒரே படத்தில் இதயத்தை கொள்ளை அடிச்சாங்க..விஜய் கூட அடுத்த படம்... லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சென்ற வருடம் ரிலீசான படங்களிலேயே இந்த படமெல்லாம் நல்லா இருக்குமா என்று எண்ணம் வர்ற அளவுக்கு இருந்துச்சு படத்தின் ரிலீஸ் முன்னாடி. ஆனால் படம் ரிலீஸ் ஆனவுடன் எல்லாருக்கும் பயங்கர surprise, என்னடா இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்துட்டாங்க படக்குழு என்று வியந்து பாராட்டினோம்.
அது பார்டோடு மட்டும் நில்லாமல், மக்கள் கூட கூட்டமாக வந்து படத்தை பார்த்து பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய வெற்றி அடையவைத்தனர். அதனால் நடிகராக சசிகுமாருக்கு இது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. காரணம் நீண்ட நாள் களைத்து அவருக்கு ஒரு ஹிட். இனி ட்ராக் மாறி போகமாட்டார், தரமான படங்களை கொடுப்பார் என்று நம்புகிறோம்.
இந்த படத்தில் எல்லாருடைய மனதை வென்ற ஒருவரின் நடிப்பு அந்த படத்தின் நாயகி ப்ரீத்தி அஞ்சு அஸ்ராணியுடையது. எங்கிருந்தோ வந்தாங்க, தமிழ் படம் பண்ணாங்க, மனதை கொள்ளையடித்து விட்டு போய்ட்டாங்க. இப்போ இவங்களை மீண்டும் election படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
இந்த படத்தில் உறியடி, பைட் க்ளப் புகழ் விஜய் குமார் ஹீரோவா நடிக்கிறார். அதுபோக படத்துக்கு இசை கோவிந்த் வசந்தா. 96 படம் மூலம் பிரபலம். இந்த படம் சரியான அரசியலை பேசும் என்று நம்புகிறோம். பார்க்கலாம்.