ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றது: தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டி

Erode election updates

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன; வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் 1 மணி நேரம் இருக்கும் நிலையில், வாக்குப்பதிவு 70%ஐ கடந்தது

2021 தேர்தலில் இந்த தொகுதியில் 66.24% வாக்குகள் பதிவாகியிருந்தது.

--

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன.

--

தற்போதைய நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன; ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நடந்துவருகிறது

இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை; தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்

-ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவு

138வது வாக்குச்சாவடியான ராஜாஜிபுரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளதால், அங்குமட்டும் வாக்குப்பதிவு நடக்கிறது. 6 மணிக்கு பிறகு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வரும் ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு

வாக்களிக்க காத்திருக்கும் அனைவருக்கும் இரவு உணவு வழங்க தேர்தல் பார்வையாளர் உத்தரவு.

Related Posts

View all