என்ன பேசவே மாட்றாங்க செய்கை மட்டும் தானா.. ஹாட் அதிதி.. காந்தி டாக்ஸ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இப்போ போக போக வரும் இந்திய படங்களில் விஜய்சேதுபதி இல்லாத இடமே இல்லை அப்படிங்கிற எண்ணத்தை கொண்டுவந்து விட்டார். ஏற்கனவே நிறைய பாலிவுட் ப்ரொஜெக்ட்களை கையில் வைத்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி இன்று திடீரெண்டு இதுவரை இந்த படத்தை பற்றி என்ன முமறிவிப்பும் எங்கள் செவிக்கு கிட்டாத நிலையில் எப்படி இந்த படத்தை நடித்துமுடித்தார் என்று தெரியவில்லை. அவரது schedule அவ்வளவு கரெக்டாக இருக்கிறது.
அதேபோல் தான் அரவிந்த்சுவாமியும். தமிழிலும் படம் நடித்து வருகிறார், bilingual படமான ரெண்டகம் படத்தை தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் நடித்து முடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் சதுரங்க வேட்டை பார்ட் 2, கள்ளபார்ட் போன்ற படங்கள் லைன் அப்பில் உள்ளது.
அதிதி ராவ் இவங்க எப்போடா மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பாங்க என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படம். இவங்க அழகுக்கு இவங்க என்ட்ரிக்கு அப்புறமே இந்நேரம் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகை லிஸ்டில் இருந்திருக்க வேண்டும், ஆனால் பாலிவூடில் செடியில் ஆகிட்டாங்க. பல திறமைகளை கொண்ட சித்தார்த் ஜாதவ்க்கும் முக்கியமான கதாபாத்திரம். இவரின் திறமைக்கு இறுதியில் ஒரு அங்கீகாரம். ஒரு பான் இந்தியா படத்தில் முக்கியமான கதாநாயகர்களோடு நடிக்கும் பாக்கியம்.
ஏ.ஆர்.ரகுமான் இந்த வருடத்தில் அவ்வளவு படங்கள் பண்ணிட்டாரு, இன்னும் எவ்வளவு surprise நமக்கு கொடுத்துக்கொண்டே இருக்கப்போகிறார் என்று தெரியவில்லை. இந்த டீசரை பொறுத்தவரை ஹீரோ இவரோட இசை தான். அது எப்படி நாளாக நாளாக எல்லாரும் outdated ஆகும்போது இவர் மட்டும் புது புது இசையை எடுத்துவருகிறார் என்று தெரியவில்லை. இந்த படத்தில் யாரும் பேசவே மாட்டாங்க போல, சைலன்ட் மூவி என்று சொல்லப்படுகிறது. பார்ப்போம் இந்த வித்தியாசமான முயற்சி எப்படி ரசிகர்கள் மத்தியில் ஒர்கவுட் ஆகுது என்பது.
Video: