ரொமான்ஸ் சீன்லாம் தரமா இருக்கும் போலயே கட்டா குஸ்தி படத்துல. பூங்குழலி செம்ம ஹாட். வீடியோ வைரல்.
விஷ்ணு விஷால் ஒரு ஸ்கிரிப்ட் சூஸ் பண்ணி நடிக்கிறார் என்றாலே அந்த படத்தில் என்டேர்டைன்மெண்டுக்கு மினிமம் கேரண்ட்டி. இந்த கட்டா குஸ்தி படத்தை தெலுங்கு சூப்பர்ஸ்டார் ரவி தேஜாவுடன் சேர்ந்து இவரே தயாரித்திருக்கிறார். அதனால் தமிழ்/தெலுங்கிலும் பெரிய ரிலீஸ் பிளான் செய்திருக்கிறது படக்குழு. இந்த படம் நவம்பர் 2 ரிலீஸ். இன்னும் கொஞ்ச நாட்களில் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி விடும்.
இதுவரை இந்திய சினிமாவில் குஸ்தியை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. அதில் பல கதாபாத்திரங்கள் நமக்கு நெருக்கமானவை. அந்த வகையில் சூப்பர்ஹிட்டான படங்கள் வரிசையில் உள்ள படங்கள் டங்கள், சுல்தான், தமிழில் எடுத்து கொண்டால் சர்பட்டா பரம்பரை, தளபதி விஜய் நடிச்ச மெர்சல் படத்திலே ஒரு விஜயின் இண்ட்ரோவே குஸ்தி சண்டையில் தான் ஆரம்பிக்கும். இதையெல்லாம் விட இந்த படத்தில் என்ன இருக்கும் என்பதில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளது.
இதுவரை வந்த படங்களில் மனதில் நின்ற கதாபாத்திரம் என்றால் ரங்கன் வாத்தியார் தான். ரங்கன் வாத்தியாராக படம் முழுவதுமே மிகவும் அருமையான நடிப்பு ஒரு நேர்மையான குஸ்தி வாத்தியாராக வாழ்ந்து விட்டீர்கள் பசுபதி சார். துண்டை எடுத்து வீசி எறிந்து குத்துச்சண்டை நிறுத்தும் காட்சியில் மிக அற்புதமான நடிப்பு தயக்கம், தோல்வி வலி, உயிரை காக்க போராட்டம் உணர்ச்சி கலந்த நடிப்பு. அது போல ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் இந்த படத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஷ்ணு விஷால் உடம்பை கொஞ்சம் இந்த படத்துக்காக ஏத்தியுள்ளார். பார்ப்பதற்கு குஸ்தி வீரர் போலவே உள்ளார். மனைவியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் மாஸ் சீன்ஸ் இருக்கும் போல. ஒரு சில போட்டோக்கள் எல்லாம் வேற லெவெலில் உள்ளது. எப்போதும் முகத்தில் ஒரு கோபத்துடனே இருக்கிறார்.
Glimpse: