கட்டா குஸ்தி விமர்சனம்..காமெடில பிச்சு உதரீட்டாங்க. விஷ்ணு விஷால் selection தப்பா போகல இந்த முறையும். முழு விவரம்.
ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் அவங்க எடுத்த படத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்த அந்த படத்துக்கு பிரீமியர் ஷோ பிரஸ்க்கு எல்லாம் போட்டுக்காட்டலாம் என்ற முடிவு எடுத்திருப்பாங்க. இப்போ பாருங்க இந்த படத்துக்கு எல்லா பக்கமும் இருந்து பாஸிட்டிவ் விமர்சனங்கள் பொழியுது. விஷ்ணு விஷால் ஓட கதை selection எப்போதும் மிஸ் அகத்து என்று மீண்டும் நிரூபிச்சிருக்காரு இந்த படத்தின் மூலமா. இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் இயக்குனர் செல்ல அய்யாவு மாதிரி தான் யூஸ் பண்ணிக்கணும்.
படத்தின் முதல் பாதி முரட்டு முதல் பாதி என்று சொல்லலாம். கருணாஸ், காலி வெங்கட் எல்லாரும் பிரிச்சு மேஞ்சுட்டாங்க. என்னடா ட்ரைலர் பார்க்கும்போது இது முன்னாடியே வந்த கதை தான் இதில் என்ன புதுசா பண்ணிருக்க போறாங்க என்று நினைத்தால் பண்ணிருக்காங்களே என்று தோன்றுகிறது. திருச்சிற்றம்பலம் படத்துக்கு பின் ஒரு நல்ல பீல் குட் மூவி பார்த்த பீல். முதல் பாதி ஜாலியா போனாலும், இரண்டாம் பாதில பேமிலி எமோஷன்ஸ் எல்லாம் வெச்சு ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமாவா முடிச்சிருக்காங்க, ஹை நோட்டில்.
விஷ்ணு விஷால்கிட்ட மற்ற நடிகர்கள் எல்லாம் கத்துக்கணும். ரொம்ப balance பண்ணி நடிச்சுட்டு இருக்காரு. இந்த வருடம் இவருக்கு முன்னர் ரிலீஸ் ஆன FIR படமும் செம்ம ஹிட்டு, இந்த படமும் செம்ம ஹிட்டு. சீரியஸ் படத்திலும் கலக்குகிறார், காமெடிய எமோஷனல் படத்திலும் கலக்குகிறார். அடுத்த படம் வேற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட. எவ்வளவு அழகா அவரோட career shape பண்ணிட்டு இருக்கார் பாருங்க.
கல்யாணம் வேணாம் சொல்றவன் கூட இந்த கட்டா குஸ்தி படம் பாத்தா உடனே கல்யாணம் பண்ணிப்பான். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி பாஆஆஆஆ என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு. கண்டிப்பா இந்த படம் இருவருக்குமே ஒரு பெரிய படமா வசூல் ரீதியா இருக்கப்போகுது. பேமிலி கூட்டம் அள்ளப்போகுது. இந்த மாதம் தொடக்கமே அருமையா தொடங்கிருக்கு.
ரேட்டிங்: 3.5/5