இதைத்தானே எதிர்பார்த்தோம். காக்கி டிரஸ்ல்ல செம்ம ஹாட்டு காஜல் அகர்வால். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ghosty video viral kajal agarwal

காஜல் ரசிகர்கள் காஜலின் அடுத்த ரிலீஸ் இந்தியன் 2 படமாக தான் இருக்கும் என்று நினைத்து வந்தனர். ஐயோ தலைவியை பெரியத்திரையில் பார்க்க இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகுமே என்று வருந்தி வந்தனர். அவங்களுக்கு எல்லாம் surprise கொடுக்கும் வண்ணம் இப்போ செம்ம வீடியோ ஒன்னு இறங்கிருக்கு. கோஷ்டி படகின் ட்ரைலரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற திரைப்படங்களை எடுத்து நம்மை காமெடியில் குலுங்க குலுங்க சிரிக்க வாய்த்த இயக்குனர் தான் இந்த படத்துக்கும் இயக்குனர்.

இந்த படத்தில் காஜல் டபுள் ஆக்ட். ஒருத்தர் போலீஸ், இன்னொருவர் ஹீரோயின்னா வர்றாங்க. யாரோ ஒருத்தர் பண்ணின தப்பினால் ஒருத்தர் அந்த பேய் கிட்ட மாட்டிக்கிறாங்க. இதான் படத்தின் கான்செப்ட். அதை எவ்வளவு காமெடியா கொடுக்க முடியுமோ அவ்வள்வோ காமெடிய ட்ரை பண்ணிருக்காரு இயக்குனர் கல்யாண். யோகி பாபு இல்லாத படமே இப்போ வர்றதில்லை, அதேபோல இந்த படத்திலும் அவர் இருக்காரு. கதையே இவர் மூலமா தான் தெரிய வருது.

Ghosty video viral kajal agarwal

ஊர்வசி அவங்க சினிமா வாழ்க்கையில் செகண்ட் இன்னிங்ஸ் விளையாடிட்டு இருக்காங்க. காமெடிய அதில் perform பண்ண ஸ்கோப் இருக்கிறது என்றால் இயக்குனர் போவது ஊர்வசியிடம் தான். செம்ம சட்டில்லா perform பண்ணி நம்மை சிரிக்க வைப்பதில் நல்லவங்க அவங்க. இவங்க செம்மையை யூஸ் பண்ணினது RJ பாலாஜி தான், அதேபோல் இயக்குனர் கல்யாணும் யூஸ் பண்ணிருப்பார் என்று நம்புவோம்.

காஜல் அவங்களுக்கே உரிய கிளாமருடன் ஹீரோயின் ரோல், கொஞ்சம் கெத்தாக போலீஸ் ரோல். ஒரு சில காட்சிகள் கர்பமா இருக்கிறப்போ நடிச்சிருப்பாங்க போல. அது அப்படியே தெரியுது. அந்த குறையை எல்லாம் படத்தின் காமெடி முறியடித்துவிடும் என்று நம்புகிறோம்.

Video:

Related Posts

View all