அரசியல்வாதி நயன்தாரா.. CM ஆக எல்லா பொருத்தமும் கச்சிதமா இருக்கு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
மோகன் ராஜா ஒரு வழியா தெலுங்கு காட் பாதர் படத்தை முடிச்சுட்டாரு. இந்த படம் மலையாள ப்ளாக்பஸ்டர் லூசிபர் படத்தோட ரீமேக். சமீப காலமாய் ஒரு பெரிய ஹிட்டுக்கு ஏங்கி கொண்டிருக்கும் சிரஞ்சீவிக்கு இந்த படம் ஹிட் ஆகும் என்று நம்பப்படுகிறது. பல வெளிவிளக்கலை கண்டா நாயகன் சிரஞ்சீவி, ஆனால் இவருக்கு ஒரு பெரிய ஹிட் சமீபத்தில் இல்லை என்பது வருத்தமான விஷயம்.
இந்த படத்தின் கதை நிறைய பேருக்கு தெரியும். ஒரிஜினல் படத்தில் மஞ்சு வாரியர் ரோலை இந்த படத்தில் நயன்தாரா ஏற்று நடித்துள்ளார். அந்த ரோல் மட்டும் தான் கிட்டத்தட்ட மிகவும் கச்சிதமாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வண்ணம் இருக்கிறது. ஆனால் சிரஞ்சீவியின் லுக் அவரின் முந்தைய படங்களை விட இது செம்ம கிளாஸாக இருக்கிறது.
இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். மலையாள படத்தில் பிரித்விராஜ் ஏற்று நடித்த கதாபாத்திரம் அது. சிரஞ்சீவி மேல் உள்ள மதிப்பால் மட்டுமே சல்மான் கான் இந்த படத்தில் நடிக ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு இருக்கும் மாசுக்கு இந்த ரோல் மிகவும் சின்ன ரோல் தான். பிரித்விராஜ் வெறித்தனமான மோகன்லால் ரசிகன் என்பதற்காக ஒரு சில காட்சிகள் பேன் பாய் போல வைத்திருப்பார். அதேபோன்ற காட்சிகள் இருந்தால் சல்மான் கான் underplay செய்வது போல தெரியும்.
மற்றபடி இயக்கம், இசை, ஒளிப்பதிவு அனைத்தும் தரமாக இருக்கிறது.தற்போது லூசிபர் 2ம் பாகத்தை வேறு தயாராகி வருகிறது. இந்த படத்தில் 2ம் பாகத்திற்கான லீட் கொடுப்பார்களா? இல்லை முதல் பாகத்தோடு முடித்துவிடுவார்களா என்று தெரியவில்லை.
அரசியல் கதை என்பதால் சிரஞ்சீவியும் சமீபத்தில் ‘அரசியலில் இருந்து நான் விலகவில்லை கொஞ்சம் தள்ளி இருக்கிறேன்’ என்று வாய்ஸ் நோட் எல்லாம் கொடுத்திருந்தார். அது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகம் ஆகியுள்ளது. எதாவது ஆந்திரா அரசியல் ரீதியான கருத்துக்களை பேசியிருப்பாரோ என்று நினைக்க தோன்றுகிறது.
Video: