தனி ஒருவன் படத்தை விட பயங்கரமா எடுத்திருப்பார் போலயே.. ஹாட் நயன்தாரா.. மிரட்டல் வீடியோ வைரல்.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கப்போகும் படம் ‘காட் பாதர்’. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியை வைத்து இயக்கியுள்ளார்.
படத்தில் நடிகை நயன்தாரா, சல்மான் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சிரஞ்சீவிக்கு நீண்ட நாள் பெண்டிங் ஒரு நல்ல படம். அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. பல வெள்ளி விழாவை கண்ட நாயகன் இப்படி ஒரு வெற்றிக்காக வெயிட் செய்து கொண்டிருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.
இந்த படம் மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் ரீமேக். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப அங்கங்கு கொஞ்சம் மசாலா தூவி படத்தை எடுத்துள்ளார் மோகன் ராஜா.
மெகாஸ்டார் பிறந்தநாள் அதனால் இந்த மிரட்ட டீசர் இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு. படத்தின் பின்னை இசை அதிர வைக்கிறது.
வைரல் வீடியோ: