செம்ம லவ்வு, காமெடி எல்லாம் சூப்பரா இருக்கும் போல.. அழகு மீத்தா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Good night latest video viral

தமிழ் சினிமாவில் எப்போது வித்தியாசமான கதையுடன் படம் வந்தாலும் தமிழ் ரசிகர்கள் அதை ஆதரிக்காமல் இருந்ததில்லை. ஒரு சில நேரங்களில் நடந்திருக்கலாம், ஆனால் பல படங்கள் அதுவும் நல்ல கன்டென்ட் உடன் வந்த படங்கள் ஜெயிச்சிருக்கு. உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த அயோத்தி. இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் தான்.

அதுபோல இப்போது மணிகண்டன், மீத்தா நடிப்பில் உருவாகியிருக்கும் குட் நைட் படத்துக்கும் படம் நல்ல இருக்கும் பட்சத்தில் ஆதரவு கண்டிப்பா கிடைக்கும். காரணம் மணிகண்டன் படம் செலக்ட் பண்ணினாள் நல்லா இருக்கும் என்ற நம்பிக்கை, பின் இந்த படத்தின் கதை. கதையை தான் முதலாக சொல்லியிருக்க வேண்டும்.

Good night latest video viral

இந்த படத்தின் கதை என்னவென்றால் ஹீரோக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கு. அதனால் அவர் என்னென்னல்லாம் வாழ்க்கையில் அனுபவிக்கிறார் என்று காமெடியாக சொல்லும் படம் தான் இது. மீத்தா யாரென்று தெரியாதவங்க யாருமே முதல் நீ முடிவும் நீ படம் பார்க்கத்தவங்களா தான் இருப்பாங்க.

அப்படியொரு ஜாலியான காதல் படம் அது. நம்மளுடைய ஸ்கூல், காலேஜ் லைப் அப்படியே நமக்கு திரும்ப கிடைத்தது போல ஒரு உணர்வு இருக்கும். இருவருமே ரொம்ப நல்ல படங்கள் நடித்து மேலே வந்திருக்காங்க. இருவருக்குமே இந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். ட்ரைலர் செம்மயா இருக்கு.

Video:

Related Posts

View all