ஆகவே மக்களே இது ஒரு அருமையான படம்.. Feel Good பார்க்க விரும்புறவங்க இந்த படத்தை தாராளமா பார்க்கலாம்.
இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்
மலையாள சினிமா மாதிரி வருமா..
மராட்டிய சினிமா மாதிரி இல்லீங்க…
உலக சினிமா எடுக்கனும்னா….
நல்ல Family Entertainer படமே வர்றதில்ல…….!!
எல்லாத்தையும் GOOD NIGHT படத்துல அடிச்சு காலி பண்ணிட்டாப்ல இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்….!!
பாத்திரப்படைப்பு , திரைக்கதை , சிறந்த நடிகர் தேர்வு , எளிமையான மிகச்சிறப்பான காட்சியமைப்பு என அனைத்து பக்கமும் சிக்சராக அடித்து பறக்க விட்டுருக்காப்ல இந்த (அறிமுக) இயக்குனர்.
அலப்பறை இல்லாமல் அழுத்தமாக நடித்துள்ள மணிகண்டன் , மீத்து , ரமேஷ் திலக், ரெபக்கா , அண்ணன் பாலாஜி சக்திவேல், அம்மா , தங்கை , பாட்டி , பக்ஸ் … என ஒவ்வொருவரும் நம்மை நடிப்பால் கவர்ந்திழுக்கின்றனர். இசை , படத்தொகுப்பு , ஒளி ஓவியம் என அனைத்தும் கன கச்சிதம்.
குறட்டை ப்ரச்னைய வச்சிகிட்டு சும்மா விளையாண்டுருக்காய்ங்கப்பா…
குடும்பத்தோட திரையரங்கம் போனா இந்த மே மாத விடுமுறை கொண்டாட்டம் நூறு சதவீதம் உறுதி ……!
Don’t miss it #goodnight in theatres
இந்த படத்தில் நடிச்ச எல்லாருக்குமே விருது கிடைக்கும். மீத்தா இதுபோன்ற நல்ல படங்களில் நடித்தால் அடுத்த சாய் பல்லவியாக உருவாகலாம். மணிகண்டன் தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய விஷயமா இருப்பார். ரமேஷ் திலகின் முகபாவனைகள் ரொம்ப நல்ல இருந்தது.
Rating: 4/5