என்ன அழகு டா சிம்ரன்... நம்ம இப்படி தான் இவங்கள பாக்கணும்ன்னு நெனச்சோம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிப்பு அரக்கர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு படம் பண்ணினா எப்படி இருக்கும் ஒன்னு குப்பை படம் ஆகும் இல்லையென்றால் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும். இந்த குல்மோஹர் படம் எந்த ரகம் என்று போக போக தான் தெரியும். இப்போது தான் ட்ரைலர் வந்திருக்கு, இன்னும் எவ்வளவோ இருக்கு. ஆனால் இது ஒரு குடும்ப படம்.
இந்த படத்தோட பிளேவர் அப்படியே எதோ வாரிசு படத்தை பார்ப்பது போலையே இருக்கு. அதுவும் கடைசியில் வரும் வசனம் அப்படியே வாரிசு படத்தில் வருவது போலவே. இந்த வீடு கற்களால் ஆனது கிடையாது ஆனால் அன்பு, காதல் மற்றும் உறவுகளால் ஆனது என்ற வசனம் வருகிறது. வாரிசு ஹை பட்ஜெட் குடும்ப படம் என்றால், இது லோ பட்ஜெட் குடும்ப படம்.
இந்த படத்துக்கு நடந்த ஒரு நல்ல விஷயம் படத்தின் கேஸ்டிங். மனோஜ் பாஜ்பாய், சிம்ரன், ஷர்மிளா தாகூர், சுராஜ் சர்மா, காவேரி சேத் என நடிப்பு அரக்கர்கள் ஒன்றிணைந்து ஒரு படம் பண்ணிருக்காங்க. ஆனால் அது ஒரு குடும்ப படம். இப்போ குடும்ப படம் என்றாலே மக்கள் அதுவொரு சீரியல் அப்டின்னு லேபிள் குத்திடுவாங்க. அதையெல்லாம் தாண்டி படம் ஜெயிக்கனும்.
சிம்ரன் தான் எவ்வளவு அழகா இருக்காங்க படத்தில். அவங்க எந்த angleல இருந்து பார்த்தாலும் அப்படியே ரொம்ப சின்ன வயதாகில் எப்படி இருந்தாங்களோ அப்படியே இருக்காங்க. நீண்ட நாட்கள் உடலை அப்படியே ஸ்லிம்மா வெச்சிருப்பது எல்லாம் ஒரு தனி கெத்து, இன்னும் இளம் நடிகைகளுக்கு tough கொடுக்குறாங்க என்றால் அது வேற ரகம்.
Video: