மீண்டும் பெரிய திரையில் பூனம் பஜ்வா.. இந்த வயசிலும் செம்ம ஹாட்.. மிரட்டல் நட்டி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நட்டி, பூனம் பஜ்வா நடிக்கும் குருமூர்த்தி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. நட்டி நிறைய படங்கள் நடித்து வருகிறார், இன்றைய தேதியில் இவர் நடிப்பில் மக்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் பகாசுரன். திரௌபதி, ருத்ர தாண்டவம் இயக்குனரின் அடுத்த படைப்பு. இந்த படத்தில் செல்வராகவனும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அவர் தான் வில்லன். இந்த படத்தில் நட்டி போலீஸ்.
அதன்பிறகு அடுத்தடுத்தடுத்து நிறைய படங்கள். ஷில்பா மஞ்சுநாத் கதையின் நாயகியாக நடிக்க அவருடன் வெப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த டீசரும் இணையத்தில் பெரிய ஹிட். தற்போது மீண்டும் போலீஸ் கெட்டப்பில் குருமூர்த்தி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் டீசர் தான் சமீபத்தில் வெளியானது. நட்டி நடிக்கும் படங்கள் இப்போது எல்லாம் அவருக்கு போலீஸ் கெட்டப்பையே இயக்குனர்கள் கொடுக்கின்றனர் அதுவும் அடுத்தடுத்து. இதற்குமுன்னர் கர்ணன் படத்தின் போலீஸ் அதிகாரியாக எப்படி மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குருமூர்த்தி படத்தை பொறுத்த வரை எடிட்டிங் தான் பிரச்னை. இவ்வளவு பெரிய பொருட்செலவில் படத்தையே எடுத்திருக்கின்றனர், கொஞ்சம் செலவு செய்து நல்ல எடிட்டரை போட்டிருக்கலாம். இப்போது குறும்படம் எடுக்கும் எடிட்டர்கள் கூட நன்றாக எடிட் செய்கின்றனர். பெயர் வருவது எல்லாம் டெம்ப்ளட் போல இருந்தது, அதுவும் மிகவும் பழசு. சவுண்ட் மிக்ஸிங் அதைவிட கொடூரம். என்னதான் இயக்குனர் தரமான கதை வைத்து நல்ல படம் எடுத்திருந்தாலும் மக்கள் பார்க்கும்பொழுது நல்ல அவுட்புட் இருந்தால் தான் படம் ரீச் ஆகும்.
OTT தளங்கள் கூட இந்த படத்தை வாங்குவதற்கு யோசிப்பார்கள். அந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்றே கூறலாம்.
Video: