பொண்ணுக கூட ஜாலியா பன் பண்ணலாம்ன்னு போன எடத்துல.. 13 படம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
செல்பி படத்தில் கெளதம், ஜிவி காம்போ செம்மையா ஒர்கவுட் ஆச்சு. அந்த படம் வேற லெவல் ஹிட்டு. மீண்டும் இதே காம்போவை திரையில் 13 படத்தின் மூலம் திரும்ப கொண்டுவந்திருக்காரு இயக்குனர். சம்மந்தமே இல்லாத இரண்டு வாழ்க்கைகள் ஒரு சம்பவத்தின் மூலம் இருவரும் எப்படி மீட் செய்து கொள்கின்றனர், அதனால் இவர்கள் சந்திக்கும் அபாயங்கள் போன்ற த்ரில் மொமெண்ட்ஸ் வைத்து எடுக்கபட்டிருக்கிறது இந்த படம். ஒரு காலத்தில் லைனாக பேய் படம் வந்த நிலையில், இப்போது கொஞ்சம் குறைந்த நிலையில் மீண்டும் அப்படியே தலை தூக்குகிறது.
ஒரு சாதாரணமாக நம்மை போல் வேலை செய்யும் நபர், ஜாலியாக தோழன்/தோழிகளுடன் அவுட்டிங் போலன்னு முடிவு எடுத்து ஒரு place முடிவு பண்ணிருக்காங்க. அங்க போறாங்க. அங்கு நடக்கும் அமானுஷிய விஷயங்கள். மேலும் அங்க ஒருத்தர் வாழனும்னா இன்னொருத்தர் சாகனும் அப்படிங்கிற கான்செப்ட், நண்பர்களாக இருக்கும் இவங்க, எதிரிகளா மாறுவாங்களா? இல்ல எப்படி survive பண்ண போறாங்க அப்டின்னு திரைக்கதை போகும்.
இங்க கெளதம் மேனன் போலீஸ் ஆபிஸரா என்ட்ரி கொடுக்கிறார், ஏற்கனவே அங்கு நடந்த கொலைகளை பற்றி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கு அவர், இவங்கள காப்பாற்ற எதாவது முயற்சிகள் எடுப்பாரா இல்லை இதையெல்லாம் பண்ணிட்டு இருக்கிறதே அவர்தான் அப்படிங்கிற ட்விஸ்ட் எல்லாம் எதாவது படத்தில் இருக்குமா என்பது படம் ரிலீசுக்கு பின் தான் தெரியும்.
இந்த டீசர் ஜிவியையும், கௌதமை மட்டும் சுற்றி நடக்கும் சம்பவங்களை மட்டுமே பேசுகிறது. கூட இருக்கும் கதாபாத்திரங்களை பற்றி பெரிய அறிவிப்பு இல்லை. இதுபோன்ற த்ரில்லிங் படங்களுக்கு இசை மிகவும் அவசியம். அது தான் அடுத்தடுத்து காட்சிகளை ஒரு திகிலுடன் பார்க்க வைக்கும். இது எல்லாம் படத்தில் இருக்கும் என்று நம்புவோம்.
Video: