அஜித்தை பிடிக்காதவங்க கூட அவரை நேர்ல பார்த்தா.. என்ன இப்படி சொல்றாரு. எச்.வினோத் இண்டெர்வியூ. முழு விவரம்.
அஜித் கூட யார் சேர்ந்து படம் பண்ணினாலும் ரொம்ப பிரைவேட் மனிதரா மாறிடுவாங்க போல. அப்படி என்ன பண்ணுகிறார் என்று தெரியவில்லை. அஜித்துடன் படம் பண்ணுவதற்கு முன்னால் பல நேர்களானால் கொடுத்த எச்.வினோத் இயக்குனர் தற்போது பெரிய அளவில் நேர்காணல் கொடுப்பதையே தவிர்த்து விட்டார். text நேர்காணல் மட்டுமே கொடுக்கிறார். அஜித்தின் ஒரு நல்ல படத்துக்கு அந்த படமே விளம்பரம் தான் என்ற ரூலை பாலோ பண்ணுவார் போல.
தற்போது அவர் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் அவர் சொல்லியது தான் மெய்சிலிர்க்க வைக்கிறது. துணிவு ரிலீஸின் போது நீங்க எங்கிருப்பீங்க என்ற கேள்விக்கு: பயங்கரமான spiritual பெர்சன் எச்.வினோத் என்று சொல்லலாம். அவர் துணிவு ரிலீஸின் போது சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்கவுள்ளார்.
அஜித் பற்றி கேட்டதுக்கு: அஜித் ஒரு தீர்க்கதரிசி. ஆன்லைனில் அஜித்தை பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று நிறைய பேர் உள்ளனர். அந்த பிடிக்காதவர்கள் கூட அஜித்தை நேரில் சந்தித்தால் அவர்களுக்கு பிடித்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியது, இன்னொரு தடவை பதிவிடுகிறோம் அஜித் ஒரு தீர்க்கதரிசி என்று.
வலிமை படம் ஓரளவு தான் ரசிகர்களை திருப்பதுபடுத்தியது. இந்த படத்தில் மீண்டும் தான் யாரென்று நிரூபித்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் வினோத். மேலும் வாரிசு பட இயக்குனருக்கும் இதே சிக்கல் தான். ஏனென்றால் அவர்கள் இருவரும் பணிபுரிவது இரண்டு மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து. நமக்கே அவ்வளவு பிரஷர் என்றால், அவர்களுக்கு எப்படி இருக்கும். சீக்கிரம் டீசர், ட்ரைலர் ரிலீஸ் பண்ணுங்க பா. வைய்ட்டிங்லேயே வெறி ஏறுது.