அய்யோ அம்ரிதா என்ன அழகு. எப்படி இவங்க இவ்வளவு பிரமாண்டமா படம் எடுக்குறாங்க. ஹனுமான் வீடியோ வைரல்.
தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை அவங்க பயங்கர ப்ளஸ் விசுவல்ஸ் தான். அவங்க கதையே இல்லாம குப்பை படம் எடுத்தால் கூட வேற லெவெலில் விசுவல்ஸ் வெச்சு மேட்ச் பண்ணிடுவாங்க. அவங்க இயக்குனர்களுக்கு ஒரு சென்ஸ் இருக்கு. தற்போது தெலுங்கில் இருந்து இன்னொரு பான் இந்தியா படம் என்றால் ஹனுமான் தான். விரைவில் வெளியாக இருக்கிறது. அதை முன்னிட்டு இன்று படத்தின் முதல் முன்னோட்டம் ரிலீஸ் ஆகியிருக்கு.
சமீபத்தில் வெளிவந்து எல்லாருடைய கவனமும் பெற்ற படம் ஆதிபுருஷ். இந்திய அளவில் கலாய்க்காத ஆளே இல்லை. பாகுபலி படத்தில் எப்படி இருந்த பிரபாஸ் இந்த படத்தில் அவரது லுக்கே சரியில்ல. அந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 300 கொடுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஹனுமான் படத்தின் பட்ஜெட் 50 கோடி கூட இல்லை என்று சொல்றாங்க, ஆனா எப்படி ஐந்தாவது கிராபிக்ஸ் பண்ணிருக்காங்க என்று தெரியவில்லை, நீங்க இந்த வீடியோ பார்த்தா ஆச்சார்ய படுவீங்க.
இந்த படத்தில் நம்ம அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் எல்லாம் நடிச்சிருக்காங்க. தமிழிலும் ரிலீஸ் ஆகுது இந்த படம். கடைசியில் தமிழில் ஒரு பாட்டு வரும்பாருங்க ரொம்ப goosebumps. கடைசி ஷாட்ல ஹான்டுமான வால் வெச்சு எதோ சொல்ல ட்ரை பண்ணிருக்காங்க. 50 தடவை பார்த்துட்டோம் இந்த வீடீயோவை, தமிழில் இந்த மாதிரி படம் வரவில்லை என்ற ஏக்கம் தான் இருக்கு. பாண்டஸி என்பது genre, அதிலும் கண்டிப்பாக படம் எடுக்க வேண்டும். நம்ம ஊரில் அப்படி படம் எடுக்கும் இயக்குனர் சிம்புதேவன் மட்டுமே. அவரும் இப்போ சொதப்புறாரு.
இந்த ஹனுமான் பட ரிலீசுக்கு பின் தெலுங்கு சினிமா இன்னொரு படி மேலே போகும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே overseasல எல்லாம் வசூலில் நம்ம படங்களை அடித்துவிட்டது. இந்தியாவின் முன்னணி சினிமாவாக tollywood முன்னாடி போயிட்டு இருக்கு என்பதில் சந்தேகமில்லை.
Video: