300 பருத்தி வீரர்கள் மாதிரி.. படம் நல்லா இருக்கும் போலயே.. ஹர் ஹர் மஹாதேவ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Har har mahadev video viral

இப்போது இந்தியாவில் உள்ள அணைத்து முக்கிய மொழிகளிலும் period படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. இந்த வருடமே பலப்படங்கள், அடுத்து ஒரு படம் பான் இந்தியா படம், பெயர் “Har Har Mahadev” இந்த படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க , வரும் அக்டொபர் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது அந்த காலத்தில் வாழ்ந்த மாவீரன் சத்ரபதி சிவாஜியின் கதை. இந்த மாவீரருக்கு நார்த் சைடில் கோவில் கட்டி வழிபடுவதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே ஒரு பீரியட் படம் என்றால் அரண்மனையில் நாடக்கும் விஷயங்களை வைத்து மட்டுமே இதுவரை படமாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காலத்திலும் சாதி, மதம் எல்லாம் இருந்திருக்கிறது. அதையெல்லாம் தொட்டு ஒரு கதையாக சொல்ல இருக்கின்றனர். இந்த படம் மல்டி ஹீரோ சப்ஜெக்ட். ஒரு போர் வீரன், ஒரு அரசன் இருவருக்குமான நட்பு ஆகியவற்றை இந்த படம் மூலம் சொல்ல வருகின்றனர்.

ஏற்கனவே ஹாலிவூட்டில் 300 பருத்தி வீரர்கள் என்ற படம் வந்தது, அந்த படம் வந்தபொழுது ரசிகர்களை மட்டுமல்லாது பல பெரிய இயக்குனர்களையும் கவர்ந்தது. எப்படி அந்த 300 வீரர்கள் பெரிய படையை சமாளிக்கிறார்கள் என்பது தான். அதேபோல் தான் இந்த படமும். இப்படி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை வெறும் முன்னூறு வீரர்கள் சமாளிக்கிறார்கள், எப்படி அரசனை காப்பாற்றுகிறார்கள், காப்பாற்றினார்களா இல்லையா என்பது தான் கதை. திரைக்கதையும், சண்டைக்காட்சிகள் நம்பும்படி இருந்தால் தான் படம் ஹிட் ஆகும், இல்லையேல் கஷ்டம்.

நன்றாக செலவு செய்து எடுத்திருக்கின்றனர். ஆனால் கொஞ்சம் பெரிய முகம் தெரிந்த கதாநாயகர்களை போட்டிருக்கலாம். மும்பையில் இருப்பவர்களுக்கு இவங்க யார் என்று தெரியும் போல, ஆனால் சென்னையில் இருப்பவர்களுக்கு முகம் அவ்வளவு பரிட்சயம் இல்லை.

படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Video:

Related Posts

View all